Home
Mobile

240W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50எம்பி கேமரா.. நாளைக்கு லான்ச் ஆகும் புதிய ரியல்மி போன்.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி ஜிடி 5 ஸ்மார்ட்போன் ஆனது ஆகஸ்ட் 28-ம் தேதி (நாளை) சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆனால் சில வாரங்களுக்குப் பிறகு இந்த புதிய ரியல்மி போன் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த புதிய ரியல்மி மாடலில் 240W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5240mAh பேட்டரி உள்ளது. பின்பு 240W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 4450mAh பேட்டரி கொண்ட வேரியண்ட்டும் விற்பனைக்கு வரவிருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ரியல்மி ஜிடி 5 ஸ்மார்ட்போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும்.

240W ஃபாஸ்ட் சார்ஜிங்..  நாளைக்கு லான்ச் ஆகும் புதிய ரியல்மி போன்..

அதேபோல் பாஸ்ட் சார்ஜிங் வசதிக்குத் தகுந்தபடி சிறந்த பாதுகாப்பு வசியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி 5 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ரியல்மி போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது. அதேபோல் அசத்தலான மென்பொருள் வசதியுடன் இந்த போன் வெளிவர உள்ளது.

அதாவது ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 4என்எம் (Octa Core Snapdragon 8 Gen 2 4nm) சிப்செட் கொண்டுள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ரியல்மி ஜிடி 5 ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ரியல்மி யுஐ 4.0 ஓஎஸ் (realme UI 4.0 OS) மற்றும் அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த அசத்தலான ரியல்மி ஜிடி 5 ஸ்மார்ட்போன். எனவே இந்த மென்பொருள் வசதியுடன் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் நம்பி வாங்கலாம்.

ரியல்மி ஜிடி 5 ஸ்மார்ட்போன் 50 எம்பி மெயின் கேமரா சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சார் + 8 எம்பி அல்ட்ரா-வைடு லென்ஸ் + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் ரியல்மி ஜிடி 5 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் இந்த போன் சிறந்த ஆடியோ அம்சங்களுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

12ஜிபி/16ஜிபி/24ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி/1டிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த ரியல்மி ஜிடி 5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த ரியல்மி ஜிடி 5 ரியர் கேமராவின் வலது புறத்தில் பாக்ஸ் எல்இடி ஸ்ட்ரிப் லைட்டினிங் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட பல்வேறு புதிய தொழில்நுட்ப வசதிகளை வழங்கும்.

6.74 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த ரியல்மி ஜிடி 5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 1440Hz ஹை-ஃபிரிகொன்சி PWM டிம்மிங் மற்றும் 1450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-Display Fingerprint Sensor), 5ஜி, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ரியல்மி ஜிடி 5 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த புதிய ரியல்மி போன் ரூ.45,000 பட்ஜெட்டில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Realme GT 5 Smartphone Launching Tomorrow: check specifications, price and more : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X