10 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகும் புதிய 5ஜி போன்: தூள் கிளப்பும் Realme.! அறிமுகம் எப்போது?
ரியல்மி நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி MWC 2023 நிகழ்ச்சியில் புதிய ரியல்மி ஜிடி 3 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.
குறிப்பாக இந்த போன் மற்ற ஆண்ட்ராய்டு போன்களை விட தனித்துவமான அம்சங்கள் மற்றும் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த புதிய ரியல்மி ஜிடி 3 போன் 240 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 நிமிடங்களில்...
எனவே 10 நிமிடங்களில் இந்த போனை முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும். அதாவது இந்த ரியல்மி ஜிடி 3 போன் 10 நிமிடங்களில் 100 சதவீதம் சார்ஜ் ஆகிவிடும் என நிறுவவனம் தெரிவித்துள்ளது. அதேபோல் பாஸ்ட் சார்ஜிங் வசதி ஆதரவுடன் சிறந்த பாதுகாப்பு தொழில்நுட்ப வசதியும் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் வைரல்
தற்போது இந்த ரியல்மி ஜிடி 3 போன் சார்ஜ் ஆகும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவியுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த ரியல்மி ஜிடி 3 போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி ஜிடி 3 அம்சங்கள்
ரியல்மி ஜிடி 3 ஸ்மார்ட்போன் ஆனது 6.73-இன்ச் ஃபுல் எச்டி AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. இதன் டிஸ்பிளே வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம். மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும்.
புதிய ரியல்மி ஜிடி 3 ஸ்மார்ட்போன் ஆனது சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த புதிய போன் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு அறிமுகமாகும். அதேபோல் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் சிறந்த செயல்திறன் கொடுக்கும், எனவே இந்த போனை நம்பி வாங்கலாம்.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி 3 ஸ்மார்ட்போன். எனவே இந்த போனின் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். பின்பு எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி 3 ஸ்மார்ட்போன்.
ரியல்மி ஜிடி 3 ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 240 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங்
வசதி உள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் மற்றும் பல்வேறு சென்சார் வசதிகளுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி ஜிடி 3 விலை?
அதேபோல் 5ஜி, வைஃபை, புளூடூத், என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ரியல்மி ஜிடி 3 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ரியல்மி ஜிடி 3 ஸ்மார்ட்போன் ஆனது சற்று உயர்வான விலையில் தான் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








