Home
Mobile

ப்பா என்னா காம்பினேஷன்.. ரூ.20,000 பட்ஜெட்டில் 7000mAh பேட்டரி, மிலிட்டரி கிரேட், 5G.. Realme புது போன்!

கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ரியல்மி சி75 5ஜி (Realme C75 5G) ஸ்மார்ட்போனுக்கு அடுத்தபடியாக ரியல்மி சி85 ப்ரோ 5ஜி (Realme C85 Pro 5G) ஸ்மார்ட்போன் ஆனது அறிமுகத்திற்கு தயாராக உள்ளது. எப்போது அறிமுகம்? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?

ரியல்மி சி85 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம்? இன்னும் சரியான வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை. ஆனால் இதுபோன்ற பட்ஜெட் விலை போன்களுக்கு பெரிய அளவில் வெளியீட்டு நிகழ்வு நடத்தப்படாது என்பதால், இது எப்போது வேண்டுமானாலும் (கூடிய விரைவில்) அறிமுகம் செய்யப்படலாம்.

ரூ.20,000 பட்ஜெட்டில் 7000mAh பேட்டரி, மிலிட்டரி கிரேட், 5G!

இதன் அறிமுகம் மிகவும் நெருக்கமாக உள்ளதை வெளிப்படுத்தும்படி - இந்த ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் முக்கிய அம்சங்கள் குறித்த விவரங்கள் லீக் ஆகியுள்ளது. XpertPickன் சமீபத்திய அறிக்கையின்படி, ஒரு ஆஃப்லைன் ரீடெயில் விற்பனையாளர் வழியாக ரியல்மி சி85 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் லீக் செய்யப்பட்டுள்ளது

ரியல்மி சி85 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் டிசைன்: லீக் ஆன புகைப்படங்களின் வழியாக, இது வட்டமான மூலைகளுடன் ஒரு "பாக்ஸி" தோற்றத்தை கொண்டுள்ளது. பின்புறத்தில் செவ்வக வடிவிலான கேமரா ஐலேண்ட் உள்ளது. அதில் செங்குத்தாக சீரமைக்கப்பட்ட 3 கேமரா லென்ஸ்கள் உள்ளன. கூடவே ஒரு எல்இடி ஃபிளாஷ் மற்றும் ஒரு ரிங் லைட் யூனிட்டையும் கொண்டுள்ளது.

லீக் ஆன புகைப்படங்களில் ரியல்மி சி85 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை மொத்தம் 3 கலர்களில் பார்க்க முடிகிறது - கருப்பு, பச்சை மற்றும் ஊதா. முதல் 2 கலர்களும் பிளெயின் பினிஷ் உடன் நிதானமான தோற்றத்தைக் கொண்டுள்ளன. கடைசியாக உள்ள ஊதா கலர் ஆப்ஷனானது ஒரு கிரேடியண்ட் தோற்றத்தைக் கொண்டுள்ளது. இது பிரதிபலிக்கும் ஒளியை பொறுத்து மாறக்கூடும் என்பது போல் தெரிகிறது.

ரியல்மி சி85 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: முதல் மற்றும் முக்கிய அம்சம், இது 7000mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரியை கொண்டிருக்கலாம். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் இரண்டு நாட்கள் வரை நீடிக்கும் என்று ரியில்மி கூறுகிறது. இது 45W பாஸ்ட் சார்ஜிங்குடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பேட்டரி மட்டுமின்றி ரியல்மி சி85 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது நீடித்து உழைக்கும் தன்மையிலும் அதிக கவனம் செலுத்தும். இது ஐபி69 ரேட்டிங் மற்றும் MIL-STD-810H சான்றிதழை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக "இந்த பட்ஜெட்டில்" உள்ள பெரும்பாலான ஸ்மார்ட்போன்களை விட ரியல்மி சி85 ப்ரோ 5ஜி ஆனது நல்ல வாட்டர் ப்ரூப் மற்றும் ட்ராப் ரெசிஸ்டன்ஸை வழங்கலாம்.

விலையை பொறுத்தவரை இது ரூ.20,000 - ரூ.25,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். மற்ற அம்சங்களை பொறுத்தவரை ரியல்மி சி85 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது எப்எச்டி பிளஸ் ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் நேரடி சூரிய ஒளிக்கு போதுமான பிரகாசமான 4000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம்.

சிப்செட்டை பொறுத்தவரை 5ஜி ஆதரவு, 8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை ஸ்டோரேஜ் உடன் கூடிய மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் மூலம் இயக்கப்படலாம். முன்னதாக அறிமுகமான ரியல்மி சி75 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.12,999 க்கு இந்தியாவில் அறிமுகமானதும் இங்கே குறிப்பிடத்தக்கது

ரியல்மி சி75 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.67-இன்ச் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் FHD+ டிஸ்பிளே
- 6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட்
- ஆட்டோஃபோகஸ் மற்றும் எப்/1.8 அபெர்க்ஷர் உடனான 32-மெகாபிக்சல் கேலக்ஸிகோர் GC32E2 ப்ரைமரி கேமரா
- 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 45W வயர்டு மற்றும் 5W ரிவர்ஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 6000mAh பேட்டரி
- தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP64 ரேட்டிங்

More from GizBot

Best Mobiles in India

English summary
New Realme C85 Pro 5G Phone With 7000mAh Battery Launching Soon Hands On Images Leaked
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X