குறைந்த விலையில் களமிறங்கும் ரியல்மி சி30எஸ்: எப்போது அறிமுகம் தெரியுமா?
ரியல்மி நிறுவனம் வரும் செப்டம்பர் 14-ம் தேதி இந்தியாவில் புதிய ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அட்டகாசமான அம்சங்களுடன் குறைந்த விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது இந்த போன்
6.5-இனச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்தஅட்டகாசமான ஸ்மார்ட்போன்.

32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
இந்த ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்
வசதி உள்ளது.

அருமையான சிப்செட்
ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் Unisoc T612 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

அமேசான்
இணையத்தில் கசிந்த தகவலின்படி, இந்த ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போன் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. அதேபோல் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
குறிப்பாக ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ரியல்மி ஜிடி நியோ 3டி ஸமார்ட்போனின் அம்சங்களை பார்ப்போம்.

ரியல்மி ஜிடி நியோ 3டி
ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போன் ஆனது 6.62-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் இ4 AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2400 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய சாதனம் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 870 சிப்செட்
ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போன். மேலும் Realme UI 3.0 OS சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது.
டேஷ் எல்லோ, டிரிஃப்டிங் ஒயிட் மற்றும் ஷேட் பிளாக் நிறங்களில் இந்த அட்டகாசமான ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

64எம்பி பிரைமரி சென்சார்
ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக்கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

5000 எம்ஏஎச் பேட்டரி
ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 80 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் போன்றவை இதில் உள்ள கூடுதல் சிறப்பு.
அதேபோல் விரைவில் அறிமுகமாகும் ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications