கண்ண மூடிக்கிட்டு ஆர்டர் போடலாம்.. ரூ.10000 பட்ஜெட்ல.. 108MP கேமரா.. 2TB ஸ்டோரேஜ்.. செம்ம லுக்.. என்ன மாடல்?
இன்று (ஜூலை 19) நடக்கும் வெளியீட்டு நிகழ்வில் ரியல்மி நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான ரியல்மி சி53 (Realme C53) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ரியல்மி சி53 ஆனது அறிமுகமான வேகத்தில் விற்பனைக்கும் வரவுள்ளது.
ரியல்மி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள பிரத்யேக மைக்ரோசைட்டின்படி, ரியல்மி சி53 ஸ்மார்ட்போனின் எர்லி பேர்ட் சேல் (Early Bird Sale) ஆனது இன்று நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அறியாதோர்களுக்கு எர்லி பேர்ட் சேல் என்றால் வழக்கமான விற்பனைக்கு முன்னதாக ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்ய அனுமதிக்கும் ஒரு வழியாகும்.

ரியல்மி சி53 எர்லி பேர்ட் சேல் நேரம் மற்றும் சலுகைகள்: ரியல்மி சி53 ஸ்மார்ட்போனின் எர்லி பேர்ட் சேல் ஆனது ஜூலை 19 ஆம் தேதி மாலை 6 மணி முதல் 8 மணி வரை பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட்டில் (Flipkart) நடக்கும். குறிப்பிட்ட நேரத்திற்குள் (6 - 8 மணிக்குள்) இந்த போனை வாங்கும் வாடிக்கையாளர்கள் 6ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டரோஜ் ஆப்ஷனின் மீது ரூ.1,000 வரை தள்ளுபடியை பெறுவார்கள்.
ஒருவேளை நீங்கள் ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி மற்றும் எஸ்பிஐ பேங்க் கார்டுகள் மூலம் பணம் செலுத்துகிறீர்கள் என்றால், அப்போதும் கூட இந்தச் சலுகை பொருந்தும். ரூ.1,000 என்கிற தள்ளுபடியில் ரூ.500 பேங்க் ஆஃபர் ஆக இருக்கும் மற்றும் ரூ.500 ஆனது கூப்பன் சலுகையாக இருக்கும்.
ரியல்மி சி53 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது 6.74-இன்ச் அளவிலான ஐபிஎஸ் எல்சிடி எச்டி பிளஸ் (IPS LCD HD+) டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். அது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 560 நீட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் 90.3 சதவிகித ஸ்க்ரீன்-டூ-பாடி ரேஷியோ போன்றவைகளையும் கொண்டிருக்கலாம்.
ரியல்மி சி53 ஆனது மாலி-ஜி57 ஜிபியு உடனான யுனிசோக் டி612 சிப்செட் மூலம் இயக்கப்படலாம். ரேம் மற்றும் ஸ்டோரேஜை பொறுத்தவரை, இது 4ஜிபி / 6ஜிபி ரேம், 64ஜிபி 1 28ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களை வழங்கலாம். இது 2டிபி வரை ஸ்டோரேஜை விரிவாக்கக்கூடிய ஆதரவுடன் வரலாம் என்றும் கூறப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, இதில் 108எம்பி மெயின் கேமரா மற்றும் 2எம்பி போர்ட்ரெய்ட் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 8எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 (Android 13) ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ரியல்மி யுஐ 4.0 (Realme UI 4.0) மூலம் இயங்குலாம்.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் 4ஜி டூயல் சிம் கார்டு ஸ்லாட், வைஃபை 802.11 பி/ஜி/என்/ஏசி, ப்ளூடூத் வி5.0, ஜிபிஓஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி விருப்பங்களையும் வழங்கலாம். கடைசியாக இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்யலாம்.
ரியல்மி சி53 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? விலை நிர்ணயத்தை பொறுத்தவை இரண்டு வகையான யூகங்கள் நிலவுகின்றன. ஒன்று ரியல்மி சி53 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.12,000 என்கிற பட்ஜெட்டில் வரும் என்று பரிந்துரைக்கிறது. மற்றொன்று - இது ரூ.10,000 பட்ஜெட்டில் வரும் என்கிறது. ஏனென்றால் ரியல்மி சி சீரீஸில் வாங்க கிடைக்கும் மிகவும் விலையுயர்ந்த மாடல் ரியல்மி சி55 தான்; அதன் விலையே ரூ.10,999 தான்!


Click it and Unblock the Notifications








