Home
Mobile

மார்க்கெட்ல புயலை கிளப்ப போகுது.. 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. அடுத்த ரியல்மி போன் ரெடி.. எந்த மாடல்?

ரயல்மி நிறுவனம் அடுத்து ரியல்மி 12 லைட் எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் சிப்செட், 50எம்பி டூயல் ரியர் கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி 12 லைட் ஸ்மார்ட்போன் ஆனது முதலில் சீனாவில் தான் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உலக சந்தை மற்றும் இந்தியச் சந்தையில் ரியல்மி 12 லைட் போன் ஆனது ரியல்மி 12 லைட் சி67 எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த ரியல்மி 12 லைட் போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

மார்க்கெட்ல புயலை கிளப்ப போகுது.. அடுத்த ரியல்மி போன் ரெடி..

ரியல்மி 12 லைட் அம்சங்கள் (Realme 12 Lite Specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் ரியல்மி 12 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 685 சிப்செட் (Snapdragon 685 SoC) வசதியுடன் ரியல்மி 12 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு இந்த போனுக்கு மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு (Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

குறிப்பாக 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி ஆகிய இரண்டு வேரியண்ட்களில் ரியல்மி 12 லைட் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

ரியல்மி யுஐ 4.0 (Realme UI 4.0) ஆதரவு கொண்ட ஆண்ட்ராய்டு 13 ( Android 13) இயங்குதள வசதியுடன் இந்த ரியல்மி 12 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.

மார்க்கெட்ல புயலை கிளப்ப போகுது.. அடுத்த ரியல்மி போன் ரெடி..

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி 12 லைட் ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா உடன் இந்த போன் அறிமுகமாகும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner), ஐபி54 ரேட்டிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி போன். மேலும் 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் ரியல்மி 12 லைட் போன் அறிமுகமாகும்.

குறிப்பாக ரியல்மி 12 லைட் ஸ்மார்ட்போன் யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது. மேலும் இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
New Realme 12 Lite smartphone may be launched soon: check specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X