சத்தமில்லாமல் அறிமுகமான புதிய Realme 10s 5G ஸ்மார்ட்போன்.! பட்ஜெட் விலை.!

|

ரியல்மி நிறுவனம் சமீபத்தில் தான் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் 5ஜி மற்றும் ரியல்மி 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இந்நிலையில் சத்தமின்றி புதிய ரியல்மி 10எஸ் 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ரியல்மி நிறுவனம். குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் அசத்தலான கேமரா மற்றும் தரமான சிப்செட் வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது.

தற்போது இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த புதிய ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

சத்தமில்லாமல் அறிமுகமான புதிய Realme 10s 5G ஸ்மார்ட்போன்.!

ரியல்மி 10எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்த மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 1080x2408 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் மாடல்.

Realme 10s 5G ஸ்மார்ட்போனில் தரமான சிப்செட் வசதி உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதாவது மீடியாடெக் Dimensity 810 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் செயல்திறன் மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். அதாவது கேமிங் ஆப்ஸ்களை இந்த ஸ்மார்ட்போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ரியல்மி 10எஸ் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் மாடல்.

சத்தமில்லாமல் அறிமுகமான புதிய Realme 10s 5G ஸ்மார்ட்போன்.!

ரியல்மி 10எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 0.3எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது எனவே
இந்த கேமராக்கள் உதவியுடன் அருமையான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ரியல்மி 10எஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீங்கள் 5ஜி சேவை பயன்படுத்த இந்த ஸ்மார்ட்போன்
அருமையாக உதவும். அதாவது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். பின்பு இந்த போன் 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர கைரேகை ஸ்கேனர், யுஎஸ்பி டைப்-சி போர்ட்,3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி 10எஸ் 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் கருப்பு மற்றும் நீல நிறங்களில் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 191 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தமில்லாமல் அறிமுகமான புதிய Realme 10s 5G ஸ்மார்ட்போன்.!

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்ட ரியல்மி 10எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை 1099 yuan (இந்திய மதிப்பில் ரூ.10,060) ஆக உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்பை பெரும். மேலும் ரியல்மி 10எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியச் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
New Realme 10S 5G smartphone launched with a budget of Rs.13,000 : Check Specifications and Features : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X