ஆண்டு இறுதியில் 2 அட்டகாச 5ஜி போன்களை இந்தியாவில் இறக்கிவிட்டு சம்பவம் செய்த Realme! நம்பி வாங்கலாமா?

|

ரியல்மி நிறுவனம் இந்தியாவில் Realme 10 Pro+ 5G மற்றும் Realme 10 Pro 5G ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

விற்பனை தேதி?

விற்பனை தேதி?

குறிப்பாக ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரியல்மி 10 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வரும் டிசம்பர் 14-ம் தேதி விற்பனைக்கு வரும். பின்பு ரியல்மி 10 ப்ரோ 5ஜி போன் வரும் டிசம்பர் 16-ம் தேதி விற்பனைக்கு வரும். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் தளங்களில் வாங்க முடியும்.

Top 10 ஃப்ரீ வெப்சைட் 2022: லாகின் தேவையில்லை காசு தேவையில்லை.! திரைப்படம், வெப் சீரிஸ் பார்க்கலாம்.!Top 10 ஃப்ரீ வெப்சைட் 2022: லாகின் தேவையில்லை காசு தேவையில்லை.! திரைப்படம், வெப் சீரிஸ் பார்க்கலாம்.!

நிறங்கள்?

நிறங்கள்?

ரியல்மி 10 ப்ரோ பிளஸ் 5ஜி மற்றும் ரியல்மி 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்கள் டார்க் மேட்டர், ஹைப்பர்ஸ்பேஸ் மற்றும் நெபுலா ப்ளூ நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

வா தலைவா வா.. உனக்காக இந்தியாவே வெயிட்டிங்: ஸ்னாப்டிராகன் 480+ சிப்செட் உடன் வரும் Jio Phone 5G.!வா தலைவா வா.. உனக்காக இந்தியாவே வெயிட்டிங்: ஸ்னாப்டிராகன் 480+ சிப்செட் உடன் வரும் Jio Phone 5G.!

ரியல்மி 10 ப்ரோ பிளஸ் 5ஜி அம்சங்கள்

ரியல்மி 10 ப்ரோ பிளஸ் 5ஜி அம்சங்கள்

 • டிஸ்பிளே: 6.7-இன்ச் curved AMOLED டிஸ்பிளே
 • 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
 • 950 நிட்ஸ் ப்ரைட்னஸ்
 • எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு
 • சிப்செட்: ஆக்டோ-கோர் 6என்எம் மீடியாடெக் Dimensity 1080 5G சிப்செட்
 • ட்ரிபிள் ரியர் கேமரா
 • ரியர் கேமரா: 108எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் கேமரா
 • செல்பி கேமரா: 16எம்பி
 • இயங்குதளம்: realme UI 4.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 13
 • இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவு
 • பேட்டரி: 5000 எம்ஏஎச் பேட்டரி
 • 67W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் வசதி
 • Hi-Res audio ஆதரவு கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
 • டூயல் பேண்ட் வைஃபை ஆதரவு
 • எடை: 173 கிராம்
 • ரியல்மி 10 ப்ரோ பிளஸ் 5ஜி விலை

  ரியல்மி 10 ப்ரோ பிளஸ் 5ஜி விலை

  6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி 10 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.24,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் ரூ.25,999-விலையிலும், 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் ரூ.27,999-விலையில் விற்பனை செய்யப்படும்.

   ரியல்மி 10 ப்ரோ 5ஜி அம்சங்கள்

  ரியல்மி 10 ப்ரோ 5ஜி அம்சங்கள்

  • டிஸ்பிளே: 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
  • 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
  • 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
  • சிப்செட்:6என்எம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட்
  • டூயல் ரியர் கேமரா
  • ரியர் கேமரா: 108எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா
  • செல்பி கேமரா: 16எம்பி
  • இயங்குதளம்: realme UI 4.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 13
  • இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவு
  • பேட்டரி: 5000 எம்ஏஎச் பேட்டரி
  • 33W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் வசதி
  • எடை: 190 கிராம்
  • ரியல்மி 10 ப்ரோ 5ஜி விலை

   ரியல்மி 10 ப்ரோ 5ஜி விலை

   6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.19,999-ஆக உள்ளது.

   வாய் உள்ள புள்ள பொழச்சிக்கும்! ஒரே ஒரு கோரிக்கை.. அரசாங்கத்தை வைத்தே அம்பானிக்கு ஸ்கெட்ச் போட்ட BSNL!வாய் உள்ள புள்ள பொழச்சிக்கும்! ஒரே ஒரு கோரிக்கை.. அரசாங்கத்தை வைத்தே அம்பானிக்கு ஸ்கெட்ச் போட்ட BSNL!

   நம்பி வாங்கலாம்

   நம்பி வாங்கலாம்

   இப்போது அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு ஸ்மார்ட்போன்களும் 108எம்பி கேமரா, 5ஜி ஆதரவு, தரமான சிப்செட் உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம்.

   மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
New Realme 10 Pro Plus 5G, Realme 10 Pro 5G phones launched in India: Price, Specifications : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X