இன்னும் 1 வாரம் தான்! இது வெறும் Pro இல்ல.. அதுக்கும் மேல! செம்ம குஷியில் Realme ரசிகர்கள்!
ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனை சீனாவில் நவம்பர் 17-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. அதேபோல் இந்த போன் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி 10 ப்ரோ பிளஸ்
மேலும் இந்த போன் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே இதன் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன. குறிப்பாக இந்த போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும். இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

curved AMOLED டிஸ்பிளே
ரியல்மி 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் curved AMOLED டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் தரமான மீடியாடெக் Dimensity 1080 சிப்செட் வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிககவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

108எம்பி பிரைமரி கேமரா
அதேபோல் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் 108எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் வெளிவரும்இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதேபோல் பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி போன்.

4890 எம்ஏஎச் பேட்டரி
ரியல்மி 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் 4890 எம்ஏஎச் பேட்டரி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், 5ஜி ஆதரவு மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்கள்இதில் உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்த போன் இந்தியசந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ள Realme C30s ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

ரியல்மி சி30எஸ்
ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 720x1,600 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆக்டோ-கோர் Unisoc SC9863A சிப்செட் வசதி
ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் Unisoc SC9863A சிப்செட் வசதி உள்ளது. அதேபோல் Realm UI Go Edition சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்தபுதிய ரியல்மி ஸ்மார்ட்போன் மாடல். 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போன்.

சிங்கிள் ரியர் கேமரா
ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போனில் சிங்கிள் ரியர் கேமரா மட்டுமே உள்ளது. அதாவது இந்த போன் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு, ஃபுல் எச்டி வீடியோ பதிவு ஆதரவு உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஸமார்ட்போன்.

5000 எம்ஏஎச் பேட்டரி
ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. 2ஜிபி ரேம் மற்றும் 3ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,499-ஆக உள்ளது. பின்பு இதன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி வேரியண்டின் விலை ரூ.8,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications