Home
Mobile

சொன்னத விட ரூ.10,000 கம்மி.. ஆனா ஒரு குறையும் இல்ல! மொத்த இந்தியர்களையும் சுண்டி இழுக்கும் புது Motorola போன்!

144ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் உடனான 1.5கே டிஸ்பிளே, 125W பாஸ்ட் சார்ஜிங், 12ஜிபி ரேம், ஏஐ ப்ரோ-கிரேட் கேமரா உட்பட பல முரட்டு அம்சங்களை கொண்டுள்ள இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போனின் விலை இவ்ளோ தானா? என்று ஷாக் ஆகாமல் இருக்க முடியவில்லை!

என்ன மாடல்? மோட்டோரோலா நிறுவனம் அதன் எட்ஜ் சீரீஸின் கீழ் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ (Motorola Edge 50 Pro) மாடலை ஏப்ரல் 3 ஆம் தேதியன்று அறிமுகம் செய்யவுள்ளது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் குறித்த புதிய தகவலொன்று வெளியாகி உள்ளது. இந்த புதிய விலை நிர்ணயமானது முன்னதாக எதிர்பார்க்கப்பட்ட விலையை விட ரூ.10000 குறைவாக உள்ளது!

சொன்னத விட ரூ.10,000 கம்மி.. சுண்டி இழுக்கும் புது Motorola போன்!

நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான பராஸ் குக்லானி (PasionateGeeks), மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனின் இத்தாலிய விலை நிர்ணயத்தை வெளிப்படுத்தும் ஸ்கிரீன் ஷாட் ஒன்றை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோவின் 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை 864 யூரோ ஆகும்.

இதை வைத்து பார்க்கும் போது மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் சிங்கிள் ஸ்டோரேஜ் ஆப்ஷனில் மட்டுமே வெளியாகும் மற்றும் அதன் விலை ரூ.44,999 ஆக இருக்கும் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.54,999 முதல் ரூ.64,999 க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சொன்னத விட ரூ.10,000 கம்மி.. சுண்டி இழுக்கும் புது Motorola போன்!

தற்போது கிடைத்துள்ள சமீபத்திய தகவலானது மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது இன்னும் மலிவான விலைக்கு வரும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் இந்த விலையும், இந்திய வெளியீட்டு விலையும் ஒரே மாதிரி இருக்குமா என்பதை ஏப்ரல் 3 ஆம் தேதி நடக்கும் அறிமுகத்தில் தான் தெரிந்துகொள்ள முடியும்.

என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இந்திய அறிமுகத்திற்காக இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளம் வழியாக 'டீஸ்' செய்யப்பட்டு வருகிறது. அதன் வழியாக மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஏஐ-பவர்டு ப்ரோ-கிரேட் கேமராவுடன் வரும் உலகின் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

சொன்னத விட ரூ.10,000 கம்மி.. சுண்டி இழுக்கும் புது Motorola போன்!

கேமராவை பொறுத்தவரை.. இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை (Triple Rear Camera Setup) கொண்டிருக்கும்; அதில் 50எம்பி மெயின் கேமரா இருக்கும். இதன் கேமரா செட்டப்பில் ஏஐ அடாப்டிவ் ஸ்டெபிலைசேஷன் (AI Adaptive Stabilaization), ஆட்டோ போகஸ் டிராக்கிங் (Auto Focus Tracking), ஏஐ போட்டோ என்ஹான்ஸ்மென்ட் எஞ்சின் (AI Photo Enhancement Engine), டில்ட் மோட் (Tilt Mode) உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும்.

டிஸ்பிளேவை பொறுத்தவரை.. இது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate), 2000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ் உடனான 6.7-இன்ச் பிஓஎல்இடி 1.5கே டிஸ்பிளேவை (pOLED 1.5K Display) கொண்டிருக்கும். இதன் டிஸ்பிளேவில் எஸ்ஜிஎஸ் ஐ ப்ரொடெக்ஷனையும் (SGS Eye Protection), ட்ரூ கலர் டிஸ்பிளேவும் (True Color Display), கலர் அக்யூரேஸிக்கான பான்டோன் (Pantone) சரிபார்ப்பும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சொன்னத விட ரூ.10,000 கம்மி.. சுண்டி இழுக்கும் புது Motorola போன்!

பேட்டரியை பொறுத்தவரை.. இது 125W வயர்டு பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் (Fast Charging Support) மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் (Wireless Charging Support) உடனான 4,500எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்யலாம். பெரும்பாலும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Qualcomm Snapdragon 8 Gen 3) சிப்செட்டையே பேக் செய்யும். இது ஐபி68 வாட்டர் ப்ரூப் ரேட்டிங்கையும் (IP68 Rating) கொண்டிருக்கும்.

கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை.. இந்த ஸ்மார்ட்போன் ஆனது பர்பிள் (Purple), பிளாக் (Black) மற்றும் சிலவர் (Silver) என்கிற 3 கலர்களில் அறிமுகமாகும் என்பதையும் பிளிப்கார்ட் வலைத்தளம் உறுதிப்படுத்தியுள்ளது. பர்பிள் மற்றும் பிளாக் கலர் வேரியண்ட்கள் ஆனது மேட் ஃபினிஷ் பேக் பேனல் வடிவமைப்பை கொண்டிருக்கும் என்பது போல் தெரிகிறது; சில்வர் கலர் வேரியண்ட் ஆனது மெட்டாலிக் ஃபினிஷை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Price Details of Motorola Edge 50 Pro Makes Indians Happy Ahead Launch on April 3
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X