Home
Mobile

தேங்க்ஸ் மோடி ஜி.. ஒரே நேரத்தில் 8 iPhone-கள் மீது விலை குறைப்பு.. iPhone 15, iPhone 14 முதல் iPhone SE வரை!

இந்தியாவில் இறக்குமதி வரி குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆப்பிள் (Apple) நிறுவனமானது ஐபோன் 15 (iPhone 15), ஐபோன் 14 (iPhone 14 )உட்பட மொத்தம் 8 ஐபோன் மாடல்களின் விலைகளை குறைத்துள்ளது. இதன் விளைவாக, ஆப்பிளின் மிகவும் பிரபலமான மாடல்கள் சிலவற்றின் விலைகள் ரூ.300 முதல் ரூ.6,000 வரை குறைந்துள்ளது. 2024 பட்ஜெட்டின் போது ஸ்மார்ட்போன்களுக்கான அடிப்படை சுங்க வரியை 20 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைப்பதாக இந்திய அரசாங்கம் அறிவித்த ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த நடவடிக்கை அமலுக்கு வந்துள்ளது.

என்னென்ன ஐபோன் மாடல்கள் விலைக்குறைப்பை பெற்றுள்ளன? ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸின் வெளியான 4 மாடல்களுமே விலை குறைப்பை பெற்றுள்ளன. அதாவது ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max), ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro), ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus), ஐபோன் 15 (iPhone 15) ஆகிய மாடல்களின் இந்திய விலைகளும் குறைக்கப்பட்டுள்ளது.

தேங்க்ஸ் மோடி ஜி.. ஒரே நேரத்தில் 8 iPhone-கள் மீது விலை குறைப்பு!

கூடவே சற்றே பழைய ஆப்பிள் ஐபோன் மாடல்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன. அந்த பட்டியலில் ஐபோன் 14 பிளஸ் (iPhone 15 Plus), ஐபோன் 14 (iPhone 14), ஐபோன் 13 (iPhone 13) மற்றும் ஐபோன் எஸ்இ 2022 (iPhone SE 2022) ஆகிய மாடல்கள் உள்ளன.

பழைய விலை Vs புதிய விலை: ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்கள் மிகவும் சிறிய அளவிலான விலை குறைப்பை பெற்றுள்ளன. இவ்விரு மாடல்களும் ரூ.300 விலை குறைப்பை பெற்றுள்ளன. இதனை தொடர்ந்து ஐபோன் 15 மாடல் ஆனது இனிமேல் ரூ.79,900 க்கு பதிலாக ரூ.79,600 க்கு வாங்க கிடைக்கும். இதேபோல ஐபோன் 15 பிளஸ் மாடல் ஆனது இனிமேல் ரூ.89,900 க்கு பதிலாக ரூ.89,600 க்கு வாங்க கிடைக்கும்

சற்றே பழைய ஐபோன் 14 மாடலுக்கும் இதே போன்ற விலைக் குறைப்பு தான் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் விலையும் ரூ.300 குறைக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து ஆப்பிள் ஐபோன் 14 மாடல் ஆனது இனிமேல் ரூ.69,900 க்கு பதிலாக ரூ.69,600 க்கு வாங்க கிடைக்கும்.

மேற்கண்ட 4 மாடல்களை போலவே ஐபோன் 13 மீதும் ரூ.300 விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்பானது ஐபோன் 13 மாடலை "தற்போது இந்தியாவில் வாங்க கிடைக்கும் மிகவும் மலிவான நான்-எஸ்இ மாடல்" ஆக மாற்றியுள்ளது. ரூ.300 விலை குறைப்பிற்கு பின்னர் ஐபோன் 13 மாடல் ஆனது ரூ.59,900 க்கு பதிலாக ரூ.59,600 க்கு வாங்க கிடைக்கும்.

மிகவும் மலிவான எஸ்இ மாடலை பொறுத்தவரை, ஐபோன் எஸ்இ 2022 மாடல் மீது ரூ.2300 விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து ஐபோன் எஸ்இ 2022 மாடல் ஆனது இனிமேல் ரூ.49,900 க்கு பதிலாக ரூ.47,600 க்கு வாங்க கிடைக்கும்.

ரூ.2300-ஐ விட பெரிய அளவிலான விலைகுறைப்பை பெற்றுள்ளது - ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் தான். இவ்விரு மாடல்களும் குறிப்பிடத்தக்க விலை வீழ்ச்சியை பெற்றுள்ளன. ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மாடலின் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.5100 என்கிற விலை குறைப்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து ஐபோன் 15 ப்ரோ மாடல் ஆனது இனிமேல் ரூ.1,34,900 க்கு பதிலாக ரூ.1,29,800 க்கு வாங்க கிடைக்கும்.

கடைசியாக உள்ள ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல் மீது தான் இருப்பதிலேயே பெரிய அளவிலான விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மீது ரூ.5,900 விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல் ஆனது இனிமேல் ரூ.1,59,900 க்கு பதிலாக ரூ.1,54,000 க்கு வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Price Details of iPhone 15 iPhone 14 iPhone 13 iPhone SE After Apple Announced Price Cut in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X