Home
Mobile

பட்ஜெட் விலையில் புதிய 5G போனை களமிறக்கும் போக்கோ: அறிமுகம் எப்போது?

போக்கோ நிறுவனம் பதிய போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த புதிய போன் மார்ச் 13-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஏற்கனவே சர்வதேசச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்தியாவில் இந்த போன் அறிமுகம் செய்யப்படுவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக ட்ரிபிள் ரியர் கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட், பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் இப்போது இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

பட்ஜெட் விலையில் புதிய 5G போனை களமிறக்கும் போக்கோ: அறிமுகம் எப்போது?

அட்டகாசமான டிஸ்பிளே
போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1,080 x 2,400பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1100 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போக்கோ நிறுவனம்.

புதிய போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இந்த போன் MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் புதிய 5G போனை களமிறக்கும் போக்கோ: அறிமுகம் எப்போது?

ட்ரிபிள் ரியர் கேமரா
போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போன் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தெளிவாகப் புகைப்படங்களை எடுக்க முடியும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

இந்த போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் விலையில் புதிய 5G போனை களமிறக்கும் போக்கோ: அறிமுகம் எப்போது?

பாஸ்ட் சார்ஜிங் வசதி
போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

பட்ஜெட் விலையில் புதிய 5G போனை களமிறக்கும் போக்கோ: அறிமுகம் எப்போது?

கனெக்டிவிட்டி
5ஜி, 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.1, வைஃபை, ஜிபிஎஸ் மற்றும் என்எப்சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த புதிய போன் குறைந்த எடை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போன்
பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Poco X5 5G smartphone will launch in India next week : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X