Home
Mobile

ப்ளடி ஸ்வீட்.. வெறும் ரூ.8,500 க்கு இப்படி ஒரு போன்-ஆ.. வாய்பிளக்க வைக்கும் POCO!

ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட் பிரிவில் "பார்க்கவே முடியாத" லெதர்-லைக் ஸ்ட்ரிட்ச் ஃபினிஷ் பேக் பேனல், கூடவே பெரிய 6.71-இன்ச் டிஸ்பிளே மற்றும் 5000mAh பேட்டரி என போக்கோ நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன், மற்ற நிறுவனங்களை வாய்பிளக்க வைத்துள்ளது என்றே கூறலாம்.

நாம் இங்கே பேசுவது அது போக்கோ சி55 (POCO C55) மாடலை பற்றித்தான். ரூ.30,000 என்கிற பட்ஜெட்டின் கீழ் போக்கோ எக்ஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த கையோடு, போக்கோ நிறுவனம் ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட் பிரிவின் கீழ் போக்கோ சி55 மாடலையும் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

ரூ.8,500 க்கு இப்படி ஒரு போன்-ஆ.. வாய்பிளக்க வைக்கும் POCO!

போக்கோ சி55 - பட்ஜெட் போன்களில் பார்க்க முடியாத சில அம்சங்கள் உள்ளன

மேலோட்டமாக பார்த்தால், போக்கோ சி55 ஒரு வழக்கமான (அதாவது சில பழைய போக்கோ போன்களில் நாம் பார்த்த அதே) வடிவமைப்பை பெற்றுள்ளது என்றே தோன்றும்.

ஆனால் சற்றே கவனித்தால், இதன் பேக் பேனலில் லெதர்-லைக் ஸ்ட்ரிட்ச் ஃபினிஷை பார்க்க முடியும். முன்னரே குறிப்பிட்டபடி, இது ரூ.10,000 க்குள் வாங்க கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் பார்க்க முடியாத ஒரு வடிவமைப்பாகும்.

லெதர்-லைக் ஸ்ட்ரிட்ச் ஃபினிஷ் மட்டுமின்றி, போக்கோ சி55 மாடலில் ஓலியோபோபிக் கோட்டிங் (Oleophobic coating) உடனான கீறல்-எதிர்ப்பு ஸ்க்ரீனும் (Scratch-resistant screen) உள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போன் நீர் தெறிப்பிற்கு (Water splash) எதிரான பாதுகாப்பிற்காக ஐபி52 ரேட்டிங்கையும் பெற்றுள்ளது!

போக்கோ சி55 - விலை மற்றும் இந்திய விற்பனை விவரங்கள்

போக்கோ சி55 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.9499 (4ஜிபி + 64ஜிபி) மற்றும் ரூ.10,999 (6ஜிபி + 128ஜிபி) ஆகும். ஆனால் போக்கோ நிறுவனம் இதன் மீது சில "முதல் நாள்" விற்பனை சலுகை மற்றும் தள்ளுபடியை அறிவித்துள்ளது. இதன் கீழ் 4ஜிபி + 64ஜிபி வேரியண்ட் ரூ.8499 க்கும், 6ஜிபி + 128ஐபி வேரியண்ட் ரூ.9,999 க்கும் வாங்க கிடைக்கும்.

இது வருகிற பிப்ரவரி 28 ஆம் தேதியன்று பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வரும். இது பாரஸ்ட் க்ரீன் (Forest Green),கூல் ப்ளூ (Cool Blue) மற்றும் பவர் பிளாக் (Power Black) என்கிற மூன்று கலர் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கும்.

போக்கோ சி55 - விரிவான அம்சங்கள்

- எச்டி பிளஸ் ரெசல்யூஷன் மற்றும் 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோவுடன் 6.71-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே

- மீடியாடெக் ஹீலியோ ஜி85 (MediaTek Helio G85) ப்ராசஸர் உடனாக 6ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128 ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ்

- மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்தி இன்டர்னல் ஸ்டோரேஜை விரிவுபடுத்துவதற்கான விருப்பமும் உள்ளது

- ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான எம்ஐயுஐ 13 கொண்டு இயக்கப்படுகிறது

- 50 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா செட்டப்; அதில் போர்ட்ரெய்ட் மோட், நைட் மோட், டைம்லேப்ஸ், எச்டிஆர் மோட் மற்றும் பல அம்சங்கள் உள்ளன எ

- முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது

- 10W சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி

- ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரும் உள்ளது.

Best Mobiles in India

English summary
New Poco Phone Under Rs 10000 Budget Launched in India Poco C55 All You Need To Know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X