கம்மி விலையில் விற்பனைக்கு வந்தது புதிய போக்கோ சி51 போன்: நம்பி வாங்கலாமா? வேண்டாமா?
போக்கோ நிறுவனம் அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. சமீபத்தில் இந்நிறுவனம் போக்கோ சி51 எனும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இன்று இந்த புதிய போன் விற்பனைக்கு வருகிறது.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் இன்று மதியம் 12 மணி முதல் போக்கோ சி51 போனின் விற்பனை தொடங்குகிறது. மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போக்கோ சி51 ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,499-ஆக உள்ளது. ஆனால் அறிமுக சலுகையாக இந்த போனை ரூ.7,799-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

போக்கோ சி51 ஸ்மார்ட்போன் ஆனது 6.52-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
இந்த புதிய போக்கோ சி51 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் சிபியு மற்றும் மீடியாடெக் ஹீலியோ ஜி36 பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் PowerVR GE8320 GPU ஆதரவைக் கொண்டு இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 12 (கோ எடிஷன்) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த புதிய போக்கோ சி51 ஸ்மார்ட்போன்.
குறிப்பாக போக்கோ சி51 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த போக்கோ சி51 ஸ்மார்ட்போன்.

போக்கோ சி51 ஸ்மார்ட்போனில் 8எம்பி டூயல் ரியர் கேமரா வசதி உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவுடன் இந்த புதிய போக்கோ சி51 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்.
5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது போக்கோ சி51 ஸ்மார்ட்போன். மேலும் 10 வாட்ஸ் சார்ஜிங் வசதி இதில் உள்ளது. அதேபோல் இந்த போனின் பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பவர் பிளாக் மற்றும் ராயல் ப்ளூ நிறங்களில் இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் டூயல் சிம், 4ஜி, வைஃபை 802.11 பி/ஜி/என், புளூடூத் 5.0, ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ், க்ளோனாஸ்இ 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போக்கோ சி51 ஸ்மார்ட்போன். மேலும் போக்கோ சி51 ஸ்மார்ட்போனின் எடை 192 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.
போக்கோ சி51 போனின் நிறைகள், குறைகள்: இந்த போனில் 8எம்பி ரியர் கேமராவுக்கு பதிலாக 13எம்பி கேமரா அல்லது 48எம்பி கேமரா வழங்கப்பட்டு இருந்தால் இன்னும் அருமையாக உள்ளது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த போனில் கேமராக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. பின்பு இந்த போனில் பாஸ்ட் சார்ஜிங் வசதி இல்லை என்பது மிகப் பெரிய குறை.

அதேபோல் இந்தியாவில் 4ஜி போன்களை விட 5ஜி போன்களுக்கு மட்டும் தான் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே இதில் 5ஜி வசதி இல்லை என்பதும் மிகப் பெரிய குறை. மற்றபடி பெரிய டிஸ்பிளே, அசத்தலான பிராசஸர், நீண்ட நேரம் பேக்கப் தரும் பேட்டரியுடன் கம்மி விலையில் வெளிவந்துள்ளது இந்த போன். அதாவது கம்மி விலையில் 4ஜி போனை வாங்க நினைக்கும் பயனர்கள் இதை வாங்குவது நல்லது.


Click it and Unblock the Notifications








