Home
Mobile

போக்கோவின் அடுத்த ஸ்மார்ட்போன் இது தானா? இணையத்தில் லீக் ஆனா தகவல்..

போக்கோ நிறுவனத்தின் அடுத்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வலைத்தளத்தில் வெளியாகி வருகிறது. போக்கோவின் அடுத்த ஸ்மார்ட்போன் மிட்ரேன்ஜ் மாடலாக பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி நோட் 10

புதிய போக்கோ ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 10 மாடலின் ரீ-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்று நம்பகமான டிப்ஸ்டர் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வரும் டிசம்பர் மாத மத்தியில் ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலாளர் அங்கஸ் கை

முன்னதாக போக்கோ மேலாளர் அங்கஸ் கை ஹோ என்ஜி புதிய போக்கோ ஸ்மார்ட்போன் வெளியீட்டிற்கான டீசரை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் எப்பொழுது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த தகவல்கள் இதுவரை எதுவும் லீக் ஆகவில்லை.

M2010j19CG என்ற மாடல் எண்

சமீபத்திய டீசர் தகவளின் படி, புதிய போக்கோ ஸ்மார்ட்போன் M2010j19CG என்ற மாடல் எண்ணுடன் காணப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சில தினங்களுக்கு முன்பு சியோமி ரெட்மி நோட் 10 4ஜி ஸ்மார்ட்போன் வேரியண்டின் விபரங்கள் வலைத்தளத்தில் கசிந்தது. இந்த மாடல் M2010J19SC என்ற மாடல் எண்ணுடன் சீனாவின் 3C தளத்தில் காணப்பட்டுள்ளது.

ரெட்மி 9சி மாடலின் மாற்றம்

இதே மாடல் தற்பொழுது சர்வதேச சந்தையில் M2010j19CG என்ற மாடல் எண்ணுடன் கொண்டிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு போக்கோ நிறுவனம் போக்கோ சி3 ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அந்த நேரத்தில் இது ரெட்மி 9சி மாடலின் மாற்றம் செய்யப்பட்ட வெர்ஷன் மாடலாக தான் இருந்தது என்பதை நாம் மறக்கவேண்டாம்.

Best Mobiles in India

English summary
New Poco phone reportedly launching globally in December : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X