வெறும் ரூ.9,999-க்கு புதிய 5ஜி போன்.. 50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி... தூள் கிளப்பும் POCO.!
தற்போது இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்கள் பட்ஜெட் விலையில்5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யத் தொடங்கிவிட்டன. ஆனால் அதற்கும் ஒரு படி மேலே போய் போக்கோ நிறுவனம் மலிவு விலையில் 5ஜி போனை அறிமுகம் செய்து அசத்திவிட்டது என்று தான் கூறவேண்டும். அதாவது இந்நிறுவனம் சமீபத்தில் போக்கோ எம்6 ப்ரோ 5ஜி போனை அறிமுகம் செய்தது.
இந்நிலையில் போக்கோ எம்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. அதாவது பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் இன்று முதல் போக்கோ எம்6 ப்ரோ 5ஜி போனை வாங்க முடியும். குறிப்பாக ஃபாரஸ்ட் கிரீன் (Forest Green), பவர் பிளாக் (Power Black) ஆகிய கலர்களின் விற்பனைக்கு வருகிறது இந்த அசத்தலான போன்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போக்கோ எம்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999-ஆக உள்ளது. இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.12,999-ஆக உள்ளது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும். எனவே இந்த போக்கோ எம்6 ப்ரோ 5ஜி போனை ரூ.9,999-விலையில் வாங்கலாம். மேலும் இப்போது இந்த போனின் அம்சங்களைப் பார்ப்போம்.
6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (FHD+) எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எம்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 500 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
சக்திவாய்ந்த ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜெனரல் 2 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 4nm) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மூலம் இயங்குகிறது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதி மிகவும் அருமையாக இருக்கிறது என்றே கூறலாம். அதேபோல் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த போக்கோ எம்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எம்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா வசதி இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

அதேபோல் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு வெளிவந்துள்ளது இந்த போக்கோ எம்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேசமயம் விரைவில் இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சைடு மவுண்டென்ட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared sensor), டூயல் நானோ சிம் மற்றும் எஸ்டி கார்டு போர்ட், டைப் - சி சார்ஜிங் போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக், பாட்டம் ஃபயரிங் லவுட்ஸ்பீக்கர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன. இதுதவிர ப்ளூடூத் 5.1, வைபை 6 802.11 ஏசி, 5ஜி எஸ்ஏ உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக இந்த போனின் எடை 199 கிராம் ஆகும்.


Click it and Unblock the Notifications








