POCO M5 4G: அறிமுகத்திற்கு ரெடி? முக்கிய விவரங்கள் வெளியானது!
மிகவும் அதிகம் எதிர்பார்த்த போக்கோ எம்5 4ஜி (POCO M5 4G)ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்தயாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மேலும் இணையத்தில் கசிந்த தகவலின்படி இந்த புதிய போக்கோ எம்5 போன் ரூ.15,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இணையத்தில் கசிந்த இந்த போனின் முக்கிய சிறப்பு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
போக்கோ எம்5 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பின்பு 1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போக்கோ
ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

தரமான சிப்செட்
புதிய போக்கோ போன் கேமிங் சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும். அதாவது இந்த போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி99
சிப்செட் வசதி உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த புதிய போக்கோ எம்5 4ஜி ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.
அதேபோல் இந்த போக்கோ ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

6ஜிபி ரேம்
போக்கோ எம்5 4ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

சூப்பரான பேட்டரி
போக்கோ எம்5 4ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். அதேபோல் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த போக்கோ ஸ்மார்ட்போன்.

ட்ரிபிள் ரியர் கேமரா
புதிய போக்கோ எம்5 4ஜி ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா வசதி இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால்அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் அறிமுகமாகும் இந்த அசத்தலான போக்கோ ஸ்மார்ட்போன்.

கனெக்டிவிட்டி
டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், என்எப்சி போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த போக்கோ எம்5 4ஜி ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த வடிவமைப்புடன் வெளிவரும்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications