Home
Mobile

இதுதான் போக்கோ சி55 போன்..இணையத்தில் வெளியாகிய படங்கள்! அறிமுகம் எப்போது தெரியுமா?

போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் தொடர்ந்து அசத்தலான போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. இந்நிலையில் போக்கோ சி55 எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில்
அறிமுகம் செய்ய உள்ளது.

போக்கோ சி55

அதாவது இந்த போக்கோ சி55 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் வரும் பிப்ரவரி 21-ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்போது இந்த போனின டீசர் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக போக்கோ சி55 ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த போக்கோ சி55 ஸ்மார்ட்போன்.

இதுதான் போக்கோ சி55 போன்..இணையத்தில் வெளியாகிய படங்கள்!

இப்போது வரை போக்கோ சி55 போனின் அம்சங்கள் வெளியிடப்படவில்லை. விரைவில் இந்த போனின் முழு அம்சங்கள் வெளியிடப்படும் என் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதான் போக்கோ சி55 போன்..இணையத்தில் வெளியாகிய படங்கள்!

அதேபோல் ரியல்மி சி55 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த போக்கோ எக்ஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

போக்கோ எக்ஸ்5 ப்ரோ 5ஜி

போக்கோ எக்ஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 900 nits பீக் பிரைட்னஸ் ஆதரவுடன் கூடிய 6.67-இன்ச் AMOLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. 240Hz டச் சாம்பிளிங், HDR10+ ஆதரவு மற்றும் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே.

இந்த புதிய ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 778G SoC சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. குறிப்பாக இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும். பின்பு
கேமிங் ஆப்ஸ்களை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம் என்பது
குறிப்பிடத்தக்கது.

இதுதான் போக்கோ சி55 போன்..இணையத்தில் வெளியாகிய படங்கள்!

Poco X5 Pro 5G ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களை பொறுத்தவரை, இந்த போனில் 108 மெகாபிக்சல் ISOCELL HM2 பிரதான சென்சார் உட்பட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இதில் 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் இரண்டாம் நிலை கேமராவாகவும் 2 எம்பி மேக்ரோ ஷூட்டர் மூன்றாம் நிலை கேமராவாகவும் பொருத்தப்பட்டிருக்கிறது. பின்புற கேமரா ஆனது 4K வீடியோக்களை 30fps இல் பதிவு செய்ய அனுமதிக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இதில் 120fps இல் முழு எச்டி வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

Poco X5 Pro 5G ஸ்மார்ட்போனானது 67W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதில் 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான MIUI 14 மூலம் இது இயக்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 2 வருட ஆண்ட்ராய்டு OS புதுப்பிப்புகள் மற்றும் 3 வருட பாதுகாப்பு இணைப்புகளை பெறும் என Poco உறுதியளித்துள்ளது. வாட்டர் மற்றும் டஸ்ட் எதிர்ப்பு ஆதரவுக்கான IP53 மதிப்பீட்டை பெற்றிருக்கிறது இந்த ஸ்மார்ட்போன்.

USB Type-C போர்ட் ஆதரவு மற்றும் ஹெட்போன் ஜாக் இதில் உள்ளது. Poco X5 Pro 5G ஆனது டூயல்-பேண்ட் Wi-Fi மற்றும் ப்ளூடூத் 5.1 கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டிருக்கிறது. இதில் 12-அடுக்குகள் கொண்ட கிராஃபைட் ஆதரவு இருக்கிறது. இது ஸ்மார்ட்போனின் வெப்பத்தை வெளியேற்றும் தன்மையை உறுதி செய்கிறது.

இதுதான் போக்கோ சி55 போன்..இணையத்தில் வெளியாகிய படங்கள்!

போக்கோ எக்ஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.22,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. பின்பு இந்த போன் ஆஸ்ட்ரல் பிளாக், ஹொசைரன் ப்ளூ மற்றும் மஞ்சள் நிறங்களில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்திய சந்தையில் இந்த போக்கோ எக்ஸ்5 ப்ரோ 5ஜி போனுக்கு நல்ல வரவேற்பு
உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
new Poco C55 smartphone will launch in India on February 21 Price, Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X