Home
Mobile

நல்ல மாசம் பொறக்குது.. ஜூன் 2026-ல் அறிமுகமாகும் 5 முக்கியமான புது போன்கள்.. Xiaomi முதல் OnePlus வரை!

2026 ஜூன் மாதமானது, கடந்த 2 - 3 மாதங்களை போலவே.. புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்திற்கு எந்த பஞ்சமும் இல்லாத அளவிற்கு - ஒன்பிளஸ், ஷாவ்மீ, மோட்டோரோலா, ஐக்யூ, ரெட்மி என - பல வகையான புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தை காண உள்ளது.

அப்படியாக 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ள மற்றும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் 5 முக்கியமான ஸ்மார்ட்போன்களின் (Upcoming smartphone launches in June 2026) மாடல் பெயர், அம்சங்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயம் குறித்த விவரங்கள் இதோ:

ஜூன் 2026-ல் அறிமுகமாகும் 5 முக்கியமான புது போன்கள்!

1. ஷாவ்மீ 17டி (Xiaomi17T): இது ஜூன் 4 ஆம் தேதி அன்று இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஷாவ்மீ 17டி ஸ்மார்ட்போன் ஆனது ஏற்கனவே சில ஐரோப்பிய சந்தைகளிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து 2026 ஜூன் முதல் வாரத்தில் இந்தியாவிலும் வெளியிடப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

- 120ஹெர்ட்ஸ் 6.59-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளே
- மீடியாடெக் டைமென்சிட்டி 8500 அல்ட்ரா (4என்எம்)
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்
- 50MP (வைட்) + 50MP (பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ, 5x ஆப்டிகல் ஜூம்) + 12MP (120˚ அல்ட்ராவைட்)
- 32MP செல்பீ
- 6500mAh பேட்டரி
- 67W (வயர்), 22.5W (ரிவர்ஸ் வயர்) சார்ஜிங்
- விலை சுமார் ரூ.75,000 ஆக பட்ஜெட்டில் இருக்கலாம்.

2. மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் (Motorola Edge 70 Pro Plus): இதுவும் ஷாவ்மீ 17டி ஸ்மார்ட்போனை போலவே வருகிற ஜூன் 4 ஆம் தேதி அன்று இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பபடும் என்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

- 120ஹெர்ட்ஸ் 6.8-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளே
- மீடியாடெக் டைமென்சிட்டி 8500 எக்ஸ்ட்ரீம் (4என்எம்)
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்
- 50MP (வைட்) + 50MP (பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ, 3.5x ஆப்டிகல் ஜூம்) + 50MP (அல்ட்ராவைட்) கேமரா
- 50MP செல்பீ கேமரா
- 7000mAh பேட்டரி
- 90W (வயர்), 15W (வயர்லெஸ்), 10W (ரிவர்ஸ் வயர்லெஸ்), 5W (ரிவர்ஸ் வயர்) சார்ஜிங்
- விலை சுமார் ரூ.50,000 ஆக இருக்கலாம்.

3. ஒன்பிளஸ் 15எஸ் (OnePlus 15s): சீனாவில் ஒன்பிளஸ் 15டி ஆக அறிமுகமான மாடல், ஜூன் மாதத்தில் ஏதேனும் ஒரு தேதியில் - இந்திய சந்தையில் மற்றும் உலகளாவிய சந்தைகளில் ஒன்பிளஸ் 15எஸ் ஆக அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

- 6.32-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (3என்எம்)
- 50MP (வைட்) + 50MP (டெலிஃபோட்டோ, 3.5x ஆப்டிகல் ஜூம்) கேமரா
- 16MP செல்பீ கேமரா
- 7500mAh பேட்டரி
- 100W (வயர்), 50W (வயர்லெஸ்), 10W (ரிவர்ஸ் வயர்டு) சார்ஜிங்
- விலை சுமார் ரூ.60,000 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

4. ஐக்யூ இஸட் 11 (iQOO Z11): இது ஜூன் 2026 நடுப்பகுதியில், அதாவது இந்திய சந்தையில் ஜூன் 15 வாக்கில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஏற்கனவே சீனா மற்றும் மலேசியா உட்பட பல சந்தைகளில் வெளியிடப்பட்டுள்ளது, எனவே இந்த ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களை வழங்குகிறது என்பது நமக்கு முன்பே தெரியும்.

- 6.83-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 4 (4என்எம்)
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்
- 50MP (வைட்) + இரண்டாம் நிலை லென்ஸ்
- 32MP செல்பீ
- 9020mAh பேட்டரி
- 90W (வயர்), 7.5W (ரிவர்ஸ் வயர்) சார்ஜிங்
- விலை சுமார் ரூ.60,000 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5. ரெட்மி டர்போ 5 (Redmi Turbo 5): இது ஜூன் 10 ஆம் தேதி அன்று இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரியில் வெளியிடப்பட்ட சீன மாடலின் அதே அம்சங்களுடன் ஜூன் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் இந்திய சந்தையில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- 6.59-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளே
- மீடியாடெக் டைமென்சிட்டி 8500 அல்ட்ரா (4என்எம்)
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்
- 50MP (வைட்) + 8MP (அல்ட்ராவைட்) கேமரா
- 20MP செல்பீ
- 7560mAh பேட்டரி
- 100W (வயர்), 27W (ரிவர்ஸ் வயர்) சார்ஜிங்
- விலை இந்தியாவில் சுமார் ரூ.30,000 க்கு தொடங்கலாம்.

Best Mobiles in India

English summary
New phones June 2026 India Xiaomi 17T Motorola Edge 70 Pro Plus iQOO Z11 Redmi Turbo 5 Oneplus 15s
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X