புது போன் வாங்க சரியான நேரம்.. ஏப்.9 - ஏப்.11.. 3 நாட்களில் 5 புதிய போன்கள் வருது.. என்னென்ன மாடல்கள்?
பட்ஜெட் போன்கள் முதல் ஹைஎண்ட் ஸ்மார்ட்போன்கள் வரை, இந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் பல ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவைகளில் 5 ஸ்மார்ட்போன்கள் இந்த வாரம், இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஏப்ரல் 9 - ஏப்ரல் 11 க்குள் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளன. அதென்ன மாடல்கள்? இதோ விவரங்கள்:
1. ரியல்மி நார்சோ 80எக்ஸ் (Realme Narzo 80x): இது ஏப்ரல் 9 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும். இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 சிப் மூலம் இயக்கப்படும். இது 120ஹெர்ட்ஸ் டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது ஒரு பெரிய 6,000mAh பேட்டரியை கொண்டிருக்கும், இது ஒரே சார்ஜில் 2 நாட்கள் பேட்டரி லைஃப்பை வழங்குவதாக கூறப்படுகிறது. இது 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்கும். கடைசியாக தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி69 ரேட்டிங்கை கொண்டிருக்கும்.

2. ரியல்மி நார்சோ 80 ப்ரோ (Realme Narzo 80 Pro): இது ஏப்ரல் 9 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும். இந்த ஸ்மார்ட்போன், மீடியாடெக் 4என்எம் டைமன்சிட்டி 7400 சிப் உடன் இந்தியாவில் ரூ.20,000 க்கு கீழ் கிடைக்கும் மிகவும் திறமையான ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கும். மேலும் இது 120ஹெர்ட்ஸ் டிஸ்பிளே, 6000mAh பேட்டரி, 80W பாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்களையும் கொண்டிருக்கும்
3. விவோ வி50இ (Vivo V50e): இது ஏப்ரல் 10 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும். இந்த ஸ்மார்ட்போனில் சோனி IMX882 சென்சார் கொண்ட ப்ரைமரி கேமரா மற்றும் குறிப்பிடப்படாத அல்ட்ராவைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப் இருக்கும். இது 50 மெகாபிக்சல் செல்பீ கேமராவையும் கொண்டுள்ளது. தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி69 ரேட்டிங்கையும் கொண்டுள்ளது. இது ஒரு குவாட் கர்வ்டு டிஸ்பிளே மற்றும் சில முக்கியமான AI அம்சங்களையும் பெறும்
4. ஐக்யூ இஸட்10 (iQOO Z10): இது ஏப்ரல் 11 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும். இது 90W பிளாஷ்சார்ஜ் ஆதரவுடன் ஒரு பெரிய 7300mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். இருப்பினும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்லிம் ஆன (7.89 மிமீ) மற்றும் லைட் ஆன (199 கிராம்) டிசைனை கொண்டிருக்கும். இது ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப், 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ், குவாட் கர்வ்டு AMOLED டிஸ்பிளே ஆகிய அம்சங்களையும் கொண்டிருக்கும்.
5. ஐக்யூ இஸட்10எக்ஸ் (iQOO Z10x): இது ஏப்ரல் 10 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும். இது 4என்எம் டைமன்சிட்டி 7300 சிப்செட்டை கொண்டுள்ளது. இது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் டீஸர் படங்கள் இது டூயல் ரியர் கேமராவை கொண்டிருக்கும் என்பதை குறிக்கின்றன. வரவிருக்கும் இந்தியாவில் இது ரூ. 15,000 க்கு கீழ் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் இந்த ஏப்ரல் 2025 இல் அறிமுகம் செய்யப்படலாம்?
1. ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T):
- சீன வெளியீட்டு தேதி: ஏப்ரல் 2025 க்குள்
- 6.3-இன்ச் 1.5K 120Hz டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்
- 50MP டெலிஃபோட்டோ மற்றும் 50MP ப்ரைமரி லென்ஸை உள்ளடக்கிய டூயல் ரியர் கேமரா செட்டப்
- 80W சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரி
- விலை தோராயமாக ரூ. 37,000 ஆக இருக்கலாம்
2. விவோ எக்ஸ்200 அல்ட்ரா (Vivo X200 Ultra):
- சீன வெளியீட்டு தேதி: ஏப்ரல் மாதம்; இந்திய அறிமுகம்: 2025 க்குள்
- 6.82-இன்ச் 2K LTPO டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்
- 200MP + 50MP + 50MP ட்ரிபிள் ரியர் கேமரா
- 90W சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கான ஆதரவுடன் 6,000mAh பேட்டரி
- விலை குறித்து தகவல் இல்லை
3. விவோ எக்ஸ்200எஸ் (Vivo X200s):
- சீன வெளியீட்டு தேதி: ஏப்ரல் மாதம்; இந்திய அறிமுகம்: 2025 க்குள்
- 6.67-இன்ச் OLED டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 9400+ சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்
- 50MP + 50MP + 64MP ட்ரிபிள் ரியர் கேமரா
- 6000mAh பேட்டரி
- விலை குறித்து தகவல் இல்லை


Click it and Unblock the Notifications