போட்டான் பாரு பிலிப்ஸ்.. 64MP கேமரா.. 120Hz டிஸ்பிளே.. 8GB ரேம்.. DUAL ஸ்பீக்கர்கள்.. புது ஸ்மார்ட்போன்!
இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை பிலிப்ஸ் (Philips) நிறுவனம் களமிறக்க இருக்கிறது. 64 எம்பி கேமரா, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, 8 ஜிபி ரேம் உள்ளிட்ட முக்கிய பீச்சர்களுடன் டிசைன் மற்றும் கலர் விவரங்களும் உறுதியாகி இருக்கின்றன. இந்த பிலிப்ஸ் ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
அமேசான் தளத்தில் புதிய பிலிப்ஸ் ஸ்மார்ட்போனுக்கான மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் பிலிப்ஸ் ஸ்மார்ட்போன் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, பெயர் தெரியவில்லை. இருப்பினும், முக்கிய பீச்சர்களுடன் டிசைன் மற்றும் கலர் விவரங்கள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மூன்று கலர்களில் வெளியாக இருக்கிறது.

பிளாக் (Black), கிரே (Grey) மற்றும் ஒயிட் (White) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. டூயல் ரியர் கேமரா (Dual Rear Camera) கொடுக்க இருக்கிறது. ஃபிளாஷ் லைட்டானது, ஆரா எல்இடி போல கொடுக்கப்பட இருக்கிறது. ஆகவே, நைட்போட்டோகிராபி பீச்சர்களை இந்த பிலிப்ஸ் ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கலாம். இப்போது மற்ற பீச்சர்களை பார்க்கலாம்.
பிலிப்ஸ் ஸ்மார்ட்போன் அம்சங்கள் (Philips Smartphone Specifications): இதுவொரு 5ஜி கனெக்டிவிட்டி கொண்ட மாடலாக வெளியாக இருக்கிறது. ஆகவே, மீடியாடெக் அல்லது ஸ்னாப்டிராகன் சிப்செட் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. மாலி கிராபிக்ஸ் கார்டு கிடைக்கலாம். 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன.
64 எம்பி ஏஐ ரியர் கேமரா கொண்ட மாடலாக இந்த பிலிப்ஸ் ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது. ஏஐ கேமராவாக குறிப்பிடப்பட்டுள்ளதால், ஏஐ கேமரா பீச்சர்களை எதிர்பார்க்கலாம். செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 16 எம்பி கேமராவை பேக் செய்துள்ளது. டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers) கொடுக்கப்பட இருக்கின்றன.
IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust & Splash Resistance) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளேவை கொடுக்க இருக்கிறது. இந்த பீச்சர்களை மட்டுமே உறுதி செய்து இருக்கிறது. மற்ற பீச்சர்கள் வெளியாகவில்லை. பேட்டரி மற்றும் சிப்செட் பீச்சர்கள் மட்டுமே தெரியவேண்டி இருக்கிறது.
ஆகவே, ஓரிரு வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்த வாரத்துக்குள் வெளியீட்டு தேதி மற்றும் மற்ற பீச்சர்கள் உறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்தியாவில் பிலிப்ஸ் நிறுவனத்துக்கு நல்ல பெயர் இருக்கிறது. ஆகவே, ஸ்மார்ட்போன் நல்ல குவாலிட்டியில் பக்கா பீச்சர்களை கொடுத்தால் போதும், விற்பனையில் வரவேற்பு பெறலாம்.
சீன நிறுவனங்கள் வெறும் ரூ.10,000 பட்ஜெட்டில் இதுபோன்ற பீச்சர்களை கொடுத்து வருகின்றன. ஆகவே, பிலிப்ஸ் நிறுவனமானது, இந்த ஸ்மார்ட்போனுக்கு எப்படி பட்ஜெட்டை நிர்ணயம் செய்யும் என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும். அதே நேரத்தில் சிப்செட் மற்றும் பேட்டரி பேக்கப்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது.
ஏனென்றால், பெரிய பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் எளிதாக வரவேற்பை பெறுகின்றன. இதையெல்லாம், பிலிப்ஸ் நிறுவனம் எவ்வாறு கையாளப்போகிறது என்பதை ஓரிரு வாரங்களில் தெரிந்து கொள்ளலாம். டிசைனை பார்க்கையில், எந்த குறையும் சொல்ல முடியவில்லை. பிரீமியம் லுக் கொடுக்கும்படியே இருப்பை மறுக்க முடியாது.


Click it and Unblock the Notifications