Home
Mobile

புதுமை விரும்பிகளுக்கு ஓர் புதிய ஸ்மார்ட்போனாக பேன்டெக் வேகா!

By Super

புதுமை விரும்பிகளுக்கு ஓர் புதிய ஸ்மார்ட்போனாக பேன்டெக் வேகா!
புதிய ஸ்மார்ட்போனுடன் ஒன்றை உருவாக்கி உள்ளது பேன்டெக் நிறுவனம். வேகா எல்டிஇ ஐஎம்-ஏ830எஸ் ஸ்கை என்ற ஆன்ட்ராய்டு வி4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். கியூவல்காம் ஸ்னாப்டிராகன் எம்எஸ்எம்8960 என்ற சிப்செட்டும் இந்த ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வேகா ஸ்மார்ட்போன் 1,500 மெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் தன்மை கொண்டது.

720 X 1280 பிகஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போனில், டிஎப்டி திரை தொழில் நுட்பமும் உள்ளது. அதிக துல்லியம் இருந்தால் மட்டும் போதாது. புகைப்படமோ, தகவல்களோ எதையும் தெளிவாக காட்ட சிறந்த திரை தொழில் நுட்பமும் இருக்க வேண்டும். இந்த ஸ்மார்ட்போனில் சிறந்த துல்லியத்தினையும், தொழில் நுட்பத்தினையும் பெறலாம்.

இதன் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் புதிய புதிய அப்ளிக்கேஷன் வசதிகளையும் பெற முடியும். இந்த வேகா ஸ்மார்ட்போன் 32ஜிபி வரை எக்ஸ்டர்னல் மெமரி வசதியினை கொடுக்கும். பிரவுசிங் போன்ற சவுகரியங்களையும் இதன் ஜிபிஆர்எஸ், எட்ஜ் தொழில் நுட்பத்தில் எளிதாக பயன்படுத்தலாம்.

ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேயர் வசதி மட்டும் அல்லாமல், 3ஜி நெட்வொர்க் தொழில் நுட்பத்தினையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும். ஜூன் மாதம் இந்த புதிய ஸ்மார்ட்போன் மொபைல் சந்தையை ஹிட் செய்யும் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலையும், இன்னும் அதிக தகவல்களும் கூடிய விரைவில் வெளியாகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X