எலுகா ஸ்மார்ட்போன்: பானசோனிக்கின் அடுத்த அறிமுகம்

Posted By: Staff
எலுகா ஸ்மார்ட்போன்: பானசோனிக்கின் அடுத்த அறிமுகம்
புதியதொரு மின்னணு சாதனத்தை பானசோனிக் நிறுவனம் கொடுக்க இருப்பதாக வலைத்தளங்களில் சில விவரங்கள் வலம் வந்து கொண்டு இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் திரை வசதியையும் வழங்கும்.

ஓஎல்இடி திரை தொழில் நுட்பத்தினை கொண்டதோடு 960 X 540 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும். சில மொபைல்களில் டஸ்டு ப்ரூஃப் வசதி இல்லாததால், சுத்தம் செய்வதற்காகவே மொபைல் சர்வீஸ் சென்டர்களில் கொடுக்க வேண்டி இருக்கிறது.

ஆனால் இந்த பானசோனிக் எலுகா ஸ்மார்ட்போனில் இது போன்று சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது. ஏனெனில் இதில் டஸ்டு மற்றும் வாட்டர் ப்ரூஃப் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் என்பதால் இது பற்றிய தகவல்கள் அவ்வளவாக இன்னும் வெளியாகவில்லை. வருகிற மார்ச் மாதம் இந்த ஸ்மார்ட்போன் மொபைல் மார்கெட்டை ஹிட் செய்யும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனபற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் மார்ச் வரை காத்திருந்து தகவல்களை பெற வேண்டி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் முதலில் ஐரோப்பா நாடுகளில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்