இறங்கி அடிச்ச Samsung.. இப்படி ஒரு 5G போனுக்கு தானே ஊரே காத்து கிடக்கு.. என்ன மாடல்? என்ன விலை?
பட்ஜெட் விலையில் ஒரு நல்ல 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க வேண்டுமென்கிற தேடலில் உள்ளீர்களா? வாங்கினால் சாம்சங் 5ஜி போனை தான் வாங்குவேன் என்று அடம் பிடிப்பவரா? அக்.8 தொடங்கும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் நல்ல மொபைல் ஆஃபருக்காக காத்திருக்கிறீர்களா?
மேற்கண்ட எல்லா கேள்விகளுக்கும் தனித்தனியாக "ஆம்" என்று பதில் கூறினாலும் சரி அல்லது மொத்தமாக தலை ஆட்டினாலும் சரி.. நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். ஏனென்றால் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஃப்34 5ஜி மாடலின் புதிய கலர் ஆப்ஷன் அறிமுகமாகியுள்ளது.

புதிய கலர் ஆப்ஷனுக்கு இவ்ளோ பில்ட்அப்-ஆ என்று கேட்டு விடாதீர்கள். விஷயம் புதிய கலர் ஆப்ஷன் அல்ல; பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது கேலக்ஸி எஃப்34 5ஜி-க்கு கிடைக்கப்போகும் சலுகையும், இந்த ஸ்மார்ட்போன் பேக் செய்யும் அம்சங்களும் தான்!
முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் எலக்ட்ரிக் பிளாக் (Electric Black) மற்றும் மிஸ்டிக் கிரீன் (Mystic Green) என்கிற 2 கலர் ஆப்ஷன்களின் கீழ் மட்டுமே வாங்க கிடைத்தது. தற்போது ஆர்க்கிட் வயலட் (Orchid Violet) என்கிற புதிய கலர் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய கலர் ஆப்ஷன் வருகிற அக்.8 ஆம் தேதி தொடங்கும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேலின் (Flipkart Big Billion Days Sale) போது விற்பனைக்கு வரும். அந்த நேரத்தில் இது பெரும்பாலும் சிறப்பு விலையின் கீழ் அல்லது தள்ளுபடி விலையின் கீழ் தான் விற்பனை செய்யப்படும்.
நினைவூட்டும் வண்ணம் கேலக்ஸி எஃப்34 5ஜி-யின் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.19,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.21,999க்கு வாங்க கிடைக்கிறது. மேற்கண்ட விலைகள் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது குறைக்கப்படலாம்.
சாம்சங் கேலக்ஸி எஃப்34 5ஜி போனின் அம்சங்கள்: இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், விஷன் பூஸ்டர் உடன் கூடிய 6.7 இன்ச் எஸ்அமோஎல்இடி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாம்சங்கின் எக்ஸினோஸ் 1280 5 என்எம் (Exynos 1380 5nm) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எஃப்34 5ஜி ஆனது சமீபத்திய ஒன் யுஐ 5.1 (One UI 5.1) ஓஎஸ் கொண்டு இயங்குகிறது, நிறுவனத்தின் கூற்றுப்படி இது யூஸர் ப்ரெண்டலி இன்டர்பேஸ் மற்றும் தடையற்ற நேவிகேஷனை வழங்கும். மேலும் சாம்சங் நிறுவனம் இந்த போனிற்கு நான்கு ஜெனரஷன் ஓஎஸ் அப்டேட்களையும், ஐந்து ஆண்டுகள் வரையிலான செக்யூரிட்டி அப்டேட்களையும் வழங்குகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, ஓஐஎஸ் ஆதரவை கொண்ட 108எம்பி நோ ஷேக் கேமரா (108MP No Shake Camera) + 8எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 32எம்பி செல்பீ கேமரா உள்ளது.
இதன் கேமரா செட்டப்பில் நைட் மோட், ஆட்டோ நைட் மோட் மற்றும் ஏஐ அடிப்படையிலான மல்டி-ஃபிரேம் ப்ராசஸிங் போன்ற கேமரா அம்சங்கள் உள்ளது. மேலும் இதன் மெயின் கேமரா மற்றும் செல்பீ கேமராக்களின் வழியாக வினாடிக்கு 30 பிரேம்களில் அல்ட்ரா-எச்டி 4கே வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும்.
இதன் கேமரா செட்டப்பில் சிங்கிள் ஷாட் என்கிற புரட்சிகரமான கேமரா அம்சமும் உள்ளது. இதன் கீழ் பல போட்டோ மற்றும் வீடியோ அவுட்புட்களை சிங்கிள் டேக்கில் வழங்கும். கடைசியாக சாம்சங் கேலக்ஸி எஃப்34 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 25W சூப்பர்-ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்ட பெரிய 6,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.


Click it and Unblock the Notifications








