Home
Mobile

ரூ.15,000 பட்ஜெட் பிச்சுக்குமே.. 6330mAh பேட்டரி, 12GB ரேம், AMOLED டிஸ்பிளேவுடன் புது OPPO போன்.. எந்த மாடல்?

2025 ஆம் ஆண்டு தொடங்கிய வேகத்தில் ஒப்போ நிறுவனம் அதன் ஒப்போ ரெனோ 13 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதன்கீழ் ஒப்போ ரெனோ 13 மற்றும் ஒப்போ ரெனோ 13 ப்ரோ என்கிற இரண்டு 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதே வேகத்தில் ஒப்போ நிறுவனமானது, 6300mAh அளவிலான பெரிய பேட்டரி கொண்ட ஒரு புதிய ஸ்மார்போனை அறிமுகம் செய்யும் என்பது போல் தெரிகிறது. அதென்ன மாடல்? அது வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்யலாம்? என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? இதோ விவரங்கள்:

ரூ.15,000 பட்ஜெட் பிச்சுக்குமே.. 6330mAh பேட்டரி உடன் புது OPPO போன்!

ஒப்போ நிறுவனம் அதன் மிகவும் பிரபலமான பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஆன ஒப்போ ஏ5 மாடலின் 2025 எடிஷனை (OPPO A5 2025) விரைவில் அறிமுகம் செய்யலாம் என்பது போல் தெரிகிறது. ஏனென்றால் இந்த மாடல் டிஇஎன்ஏஏ (TENAA) சான்றிதழ் தளத்தில் காணப்பட்டுள்ளது. கூடவே கிட்டத்தட்ட எல்லா அம்சங்களையும் வெளிப்படுத்தியுள்ளது.

டிசைனை பொறுத்தவரை ஒப்போ ஏ5 2025 எடிஷன் ஆனது, டெக்ஸ்சர்டு பேக் பேனலில் - கேமராக்களுக்கான மூன்று கட்அவுட்கள் மற்றும் ஃபிளாஷுக்கான ஒரு கட்வுட்டை கொண்ட ஸ்கிர்க்கிள் கேமரா ஹவுசிங்கை பேக் செய்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே ஸ்லிம் ஆன பெசல்களை கொண்டுள்ளது. கூடவே டிஸ்பிளேவின் மேல்பக்கத்தில் பஞ்ச்-ஹோல் கேமரா உள்ளது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 2412 × 1080 ரெசல்யூஷன் உடனான 6.7-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். சிப்செட் குறித்த விவரங்கள் வெளிப்படுத்தப்படவில்லை. ஓஎஸ்-ஐ பொறுத்தவரை இது ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) கொண்டு இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களை பொறுத்தவரை இது 8ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் ஆப்ஷன்களில் 256ஜிபி மற்றும் 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்களுடன் இணைக்கப்படலாம். கேமராக்களை பொறுத்தவரை இது 2எம்பி டெப்த், மேக்ரோ அல்லது வேறு சில சென்சார்களுடன் இணைக்கப்பட்ட 50எம்பி ப்ரைமரி கேமராவை பேக் செய்யலாம். முன்பக்கத்தில் 8எம்பி செல்பீ கேமராவை கொண்டிருக்கலாம்

பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை, முன்னரே குறிப்பிட்டபடி இது மிகப்பெரிய 6,500mAh பேட்டரியை கொண்டிருக்கும். ஆனால் டிஇஎன்ஏஏ-வில் இது 6,330mAh என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடைசியாக இது 45W பாஸ்ட் வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்போ ஏ5 2025 மாடல் ஆனது ஒப்போ நிறுவனத்தின் மூன்றாவது ஏ5 மோனிகர் ஆக இருக்கும். நினைவூட்டும் வண்ணம் இந்நிறுவனம் 2018 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் அந்தந்த ஆண்டுகளை குறிக்கும் ஒப்போ ஏ5 மாடல்களை அறிமுகப்படுத்தியிருந்தது.

அந்த இரண்டு மாடல்களும் ரூ.15,000 க்கும் குறைவான விலையில் நல்ல அம்சங்களுடன் வரும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களாக திகழ்ந்தன. அதையே நாம் 2025 மாடலிலும் எதிர்பார்க்கலாம். அதாவது இதுவும் ரூ.15,000 - ரூ.20,000 க்குள் ஏங்கிய பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கலாம்.

ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன் உடனான 6.5-இன்ச் வாட்டர் டிராப் டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட், 12எம்பி ப்ரைமரி கேமரா + 8எம்பி வைட் ஆங்கிள் கேமரா + 2எம்பி மோனோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற குவாட் ரியர் செட்டப், 16எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது.

மேலும் ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் ஆனது 3ஜிபி / 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது. கடைசியாக இது 5000எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது. ஒப்போ ஏ5 2025 மாடலின் எதிர்பார்க்கப்படும் பேட்டரியுடன் ஒப்பிடும் போது இதுவொரு மிகப்பெரிய அப்கிரேட் ஆகவும். யுனிக் செல்லிங் பாயிண்ட் ஆகவும் இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Oppo Smartphone with 6330mAh Battery Could be Oppo A5 2025 See Specifications Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X