Home
Mobile

விற்பனைக்கு வரும் புது ஒப்போ 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. 7000எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?

ஒப்போ ரெனோ 16சி 5ஜி (OPPO Reno 16c 5G) ஸ்மார்ட்போனை சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது ஒப்போ ஸ்மார்ட்போன். இந்நிலையில் இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் இன்று இரவு 12 மணி அளவில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஒப்போ ரெனோ 16சி 5ஜி விலை
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ரெனோ 16சி 5ஜி மாடலின் விலை ரூ.46,999-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ரெனோ 16சி 5ஜி மாடலின் விலை ரூ.49,999-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ரெனோ 16சி 5ஜி மாடலின் விலை ரூ.55,999-ஆக உள்ளது.
தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது.

விற்பனைக்கு வரும் புது ஒப்போ 5ஜி போன்.. 50எம்பி கேமரா..  எந்த மாடல்?

ஒப்போ ரெனோ 16சி 5ஜி அம்சங்கள் (OPPO Reno 16c 5G Specifications): ஒப்போ ரெனோ 16சி 5ஜி ஸ்மார்ட்போன் 6.32-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே உடன் புதிய அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

தரமான ஆக்டோ கோர்ட் மீடியொடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் (MediaTek Dimensity 7300 4nm) சிப்செட் உடன் ஒப்போ ரெனோ 16சி 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் Mali-G615 MC2 GPU கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த ஒப்போ போனில் உள்ளது.

அதேபோல் கலர்ஓஎஸ் 16 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 மூலம் இந்த புதிய ஒப்போ போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள கிடைக்கும். அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) ஆதரவும் இந்த போனில் உள்ளன.

குறிப்பாக 50எம்பி SC32HS மெயின் சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது ஒப்போ ரெனோ 16சி 5ஜி மாடல். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. அதேபோல் இந்த போனின் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) போன்ற வசதிகள் ஒப்போ ரெனோ16சி 5ஜி போனில் உள்ளன. மேலும் IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் + IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் உடன் வெளியாகி உள்ளது இந்த புதிய ஒப்போ போன் மாடல்.

விற்பனைக்கு வரும் புது ஒப்போ 5ஜி போன்.. 50எம்பி கேமரா..  எந்த மாடல்?

ஒப்போ ரெனோ 16சி 5ஜி ஸ்மார்ட்போன் 7000எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W SuperVOOCஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.4, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஒப்போ போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 195 கிராம் ஆகும். வயலெட் (violet), பர்பிள் மற்றும் ஒயிட் கலர்களில் இந்த போன் வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
New Oppo Reno 16C 5G phone to go on sale in India on July 9 at 12AM: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X