Home
Mobile

கர்வ்டு டிஸ்பிளே.. கலக்கல் கேமரா.. Flipkart-ல் ஆர்டர் அள்ளுது.. பட்டையை கிளப்பும் விலை.. புது OPPO 5G போன்!

இம்மாத தொடக்கத்தில், ஒப்போ (OPPO) நிறுவனத்தின் ரெனோ 10 சீரீஸின் கீழ் 3 புதிய போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. அவைகளில் ரெனோ 10 ப்ரோ 5ஜி மற்றும் ரெனோ 10 ப்ரோ பிளஸ் 5ஜி மாடல்களின் விலைகள் மட்டுமே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டன.

"வெண்ணிலா வேரியண்ட்" ஆன ஒப்போ ரெனோ 10 5ஜி (Oppo Reno 10 5G) ஸ்மார்ட்போனின் இந்திய விலை அறிவிக்கப்படவே இல்லை. ஒருவேளை ப்ரோ மற்றும் ப்ரோ பிளஸ் மாடல்களின் விற்பனையை இது பாதிக்கலாம் என்று ஒப்போ நிறுவனம் நினைத்து இருக்கலாம்.

பட்டையை கிளப்பும் விலை.. புது OPPO 5G போன்!

இதற்கிடையில், ரெனோ 10 ப்ரோ மற்றும் ரெனோ 10 ப்ரோ பிளஸ் மாடல்களின் விற்பனை தொடங்கியதை அடுத்து, ஒப்போ ரெனோ 10 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரூ.32,999 க்கு ஐஸ் ப்ளூ (Ice Blue) மற்றும் சில்வரி கிரே (Silvery Grey) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்.

ஒப்போ ரெனோ 10 5ஜி ஸ்மார்ட்போனின் ப்ரீ-ஆர்டர்கள் பிளிப்கார்ட்டில் (Flipkart Pre-order) ஏற்கனவே தொடங்கிவிட்டன. விற்பனை சலுகைகளை பொறுத்தவரை, எச்டிஎப்சி (HDFC), எஸ்பிஐ (SBI), ஆக்சிஸ் (Axis) மற்றும் ஐசிஐசிஐ (ICICI) பேங்க் கார்டுகளில் ரூ.3,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். மேலும் ரூ.4,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ், நோ-காஸ்ட் இஎம்ஐ மற்றும் 3 மாத யூட்யூப் பிரீமியம் சந்தா போன்றவைகளும் கிடைக்கும்.

அம்சங்களை பொறுத்தவரை, ஒப்போ ரெனோ 10 5ஜி ஸ்மார்ட்போனானது கர்வ்டு எட்ஜுகள் (Curved Edges), 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240ஹெர்ட்ஸ் வரையிலான டச் சாம்ப்ளிங் ரேட் உடனான 6.7-இன்ச் எஃப்எச்டி+ அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 சிப்செட் (MediaTek Dimensity 7050 SoC) மூலம் இயக்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட கலர்ஓஎஸ் கஸ்டம் ஸ்கின் (அவுட்-ஆஃப்-பாக்ஸ்) உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 64எம்பி மெயின் கேமரா + 32எம்பி டெலிஃபோட்டோ கேமரா + 8எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா உள்ளன.

முன்பக்கத்தை பொறுத்தவரை, 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. கனெக்டிவிட்டியை பொறுத்தவரை 5ஜி, 4ஜி, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப் சி போன்றவைகளை கொண்டுள்ளது. கடைசியாக இது ஒரு பெரிய 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. அது 67W சூப்பர்வூக் (SUPERVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை பெற்றுள்ளது.

முன்னரே குறிப்பிட்டபடி, ஒப்போ ரெனோ 10 5ஜி ஸ்மார்ட்போனானது கடந்த ஜூலை 10 ஆம் தேதியன்று ரெனோ 10 ப்ரோ 5ஜி (Reno 10 Pro 5G) மற்றும் ரெனோ 10 ப்ரோ பிளஸ் 5ஜி (Oppo Reno 10 Pro Plus 5G)உடன் அறிமுகமானது. ப்ரோ மாடலானது ரூ.39,999 க்கும், ப்ரோ பிளஸ் மாடலானது ரூ.54,999 க்கும் வாங்க கிடைக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Oppo Reno 10 5G Smartphone Official Price Revealed Rs 32999 Flipkart Sale Starts From Today
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X