Home
Mobile

இனி ஒன்பிளஸ் நோர்ட் போன்களே வேணாம்னு சொல்லுவீங்க.. பட்ஜெட் விலை OPPO 5ஜி போன் அறிமுகமானது.!

பல்வேறு முன்னணி செல்போன் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது ஒப்போ நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மர்ரட்போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் புதிய 5ஜி போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது ஒப்போ.

அதாவது ஒப்போ கே11எக்ஸ் (OPPO K11x) எனும் ஸ்மார்ட்போனை தான் தற்போது ஒப்போ அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் விலை OPPO 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமானது.!

புதிய ஒப்போ கே11எக்ஸ் ஸ்மார்ட்போன் 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

குறிப்பாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதியுடன் இந்த ஒப்போ கே11எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக ColorOS 13.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.

பட்ஜெட் விலை OPPO 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமானது.!

புதிய ஒப்போ கே11எக்ஸ் ஸ்மார்ட்போன் 108எம்பி ரியர் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் 16எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஒப்போ கே11எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ஒப்போ கே11எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை 33 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் பிளாக் ஜேட் மற்றும் பேர்ல்சென்ட் நிறங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.

பட்ஜெட் விலை OPPO 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமானது.!

அதேபோல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸகேனர் ஆதரவுடன் இந்த புதிய ஒப்போ கே11எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 5ஜி, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத், என்எப்சி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ போன். குறிப்பாக ஒப்போ கே11எக்ஸ் ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை CNY 1,499 (இந்திய மதிப்பில் ரூ17,600) ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
new Oppo K11x smartphone has been launched at a price of Rs.17,600: Check Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X