இப்படி ஒரு OPPO போனுக்கு தானே வெயிட் பண்ணோம்.. பட்ஜெட் விலையில் OLED டிஸ்பிளே..12GB ரேம்.. 50MP கேமரா!
ஒப்போ நிறுவனம் தனது அசத்தலான ஒப்போ கே11 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த புதிய ஒப்போ கே11 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் கூடிய விரைவில் இந்த ஒப்போ கே11 (OPPO K11) ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 100 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இப்போது ஒப்போ கே11 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒப்போ கே11 ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 2412×1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1100 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் பெரிய டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
அக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 782ஜி 6என்எம் சிப்செட் உடன் அட்ரினோ 642எல் ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ கே11 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் செயல்திறன் மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் மீடியாடெக் சிப்செட் விட ஸ்னாப்டிராகன் சிப்செட் மிகவும் சக்திவாய்ந்தது எனவே இந்த ஒப்போ கே11 ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.
இந்த ஒப்போ கே11 ஸ்மார்ட்போன் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஒப்போ கே11 ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதி மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
50எம்பி பிரைமரி கேமரா (IMX890 sensor) + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ கே11 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது ஒப்போ கே11. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
குறிப்பாக கலர்ஓஎஸ் 13.1 (ColorOS 13.1) சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது இந்த ஒப்போ கே11 ஸ்மார்ட்போன். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஒப்போ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் பல்வேறு சென்சார் வசதியை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ ஸ்மார்ட்போன்.
5000 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த ஒப்போ கே11 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 100 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது இந்த ஒப்போ கே11 ஸ்மார்ட்போன். சில நிமிடங்களில் இந்த போனை முழு சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11ஏக்ஸ், புளூடூத் 5.2, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஒப்போ கே11 ஸ்மார்ட்போன். மூன் ஷேடோ கிரே மற்றும் கிளேசியர் ப்ளூ நிறங்களில் இந்த அட்டகாசமான புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
குறிப்பாக ஒப்போ கே11 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 1899 yuan(இந்திய மதிப்பில் ரூ.21,770). அதேபோல் இந்த போன் 184 கிராம் எடை கொண்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி சீனாவில் விற்பனைக்கு வருகிறது ஒப்போ ஒப்போ கே11 ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








