Home
Mobile

ஏன்டா வாங்கினோமோனு ஒரு நாளும் யோசிக்க மாட்டீங்க.! தரமான 5ஜி போனை அறிமுகம் செய்தது OPPO.!

விவோ நிறுவனத்துக்குப் போட்டியாக அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது ஒப்போ நிறுவனம். குறிப்பாக ஒப்போ அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஒப்போ நிறுவனம் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது ஒப்போ நிறுவனம் தற்போது புதிய ஒப்போ ஏ98 5ஜி (Oppo A98 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதுவும் இந்த புதிய ஒப்போ போன் தற்போது மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த ஒப்போ ஏ98 5ஜி போனின் அம்சங்கள் மற்றும் விலை பற்றிய தகவலை இப்போது பார்ப்போம்.

தரமான 5ஜி போனை அறிமுகம் செய்தது ஒப்போ.! என்னென்ன அம்சங்கள்.!

புதிய ஒப்போ ஏ98 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.72-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 2400 X 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய போன் வெளிவந்துள்ளது.

குறிப்பாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் உடன் அட்ரினோ ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ ஏ98 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு கலர்ஒஸ் 13 சார்ந்த அணட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டு இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த ஒப்போ ஏ98 5ஜி ஸ்மார்ட்போன வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன்.

தரமான 5ஜி போனை அறிமுகம் செய்தது ஒப்போ.! என்னென்ன அம்சங்கள்.!

ஒப்போ ஏ98 5ஜி ஸ்மார்ட்போன் 64எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செலபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த அசத்தலான ஒப்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனின் உதவியுடன் துல்லியமாக வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும்.

அதேபோல் 5000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ98 5ஜி ஸ்மார்ட்போன். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். அதாவது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ஒப்போ ஏ98 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

தரமான 5ஜி போனை அறிமுகம் செய்தது ஒப்போ.! என்னென்ன அம்சங்கள்.!

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ98 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனின் எடை 192 கிராம். கருப்பு, நீல நிறத்தில் இந்த போன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த புதிய போனின் விலை RM1399 (இந்திய மதிப்பில் ரூ. 25,702)-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Oppo A98 5G smartphone launched with quality features: check price specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X