Home
Mobile

புது OPPO போன்.. 6 வருஷத்துக்கு நோ பேட்டரி சிக்கல்.. அசத்தல் விலையில் 8GB ரேம், 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஒப்போ (Oppo) நிறுவனம் வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதியன்று - அதாவது ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய ஐபோன் 17 சீரிஸ் (Apple iPhone 17 Series) மாடல்களை அறிமுகம் செய்யும் அதே நாளில் - தனது புதிய "ப்ரோ" மாடல் ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது. அது என்ன மாடல்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

என்ன மாடல்? அது ஒப்போ ஏ6 ப்ரோ (Oppo A6 Pro) ஸ்மார்ட்போன் ஆகும். இது வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ஒப்போ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உடனே இந்திய அறிமுகம் குறித்து கவலைப்பட வேண்டாம். ஒப்போ ஏ5 ப்ரோ 5ஜி மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், நிச்சயமாக ஏ6 ப்ரோ மாடலும் இந்திய சந்தைக்கு வரும்!

புது OPPO போன்.. 6 வருஷத்துக்கு நோ பேட்டரி சிக்கல்.. எந்த மாடல்?

ஒப்போ ஏ6 ப்ரோ ஸ்மார்ட்போனில் என்ன ஸ்பெஷல்? ஒப்போ நிறுவனத்தின் கூற்றுப்படி - இந்த ஸ்மார்ட்போன் ஆறு வருட பேட்டரி ஆயுட்காலம் (Six-year battery lifespan) கொண்டதாக நிறுவனம் கூறுகிறது. மேலும் ஒப்போவின் அதிகாரப்பூர்வ டீஸர் போஸ்டரின்படி, ஏ6 ப்ரோ மாடல் ஆனது பிளாட் ஆன டிஸ்பிளே டிசைனையும், அதில் மையப்படுத்தப்பட்ட பஞ்ச்-ஹோல் டிஸ்பிளேவையும் கொண்டிருக்கும்.

அதாவது ஒப்போ ஏ6 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது எல்லா இடங்களிலும் இருக்கும் பிளாட்-எட்ஜ் ஆஸ்தெட்டிக்கை கொண்டுள்ளது மற்றும் கோல்ட் கலர் பினிஷ் உடன் வருகிறது. இப்போதைக்கு இந்த ஸ்மார்ட்போன் ரியர் சைட் குறித்த எந்த விவரங்களும் இல்லை. பெரும்பாலும் அது பழைய ஏ5 ப்ரோ மாடலில் இருக்கும் டிசைனுடன் ஒற்றுப்போகலாம்

ஒப்போ ஏ6 ப்ரோ ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது மீடியாடெக்கின் டைமன்சிட்டி 6300 சிப்செட் மூலம் இயக்கப்படலாம். மேலும் இது 8ஜிபி ரேம் உடன் இணைக்கப்படலாம். ஓஎஸ்-ஐ பொறுத்தவரை இது ஆண்ட்ராய்டு 15 உடன் வரலாம். கடைசியாக ஒப்போ ஏ6 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 80W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரக்கூடும் என்று கூறுகிறது. இருப்பினும் சரியான பேட்டரி திறன் இன்னும் தெரியவில்லை.

ஒப்போ ஏ6 ப்ரோ ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? இது பெரும்பாலும் ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில், இன்னும் சரியாக சொல்லப்போனால் ரூ.18,999 அல்லது ரூ.19,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம். நினைவூட்டும் வண்ணம் ஒப்போ ஏ5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8 ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.17,999 க்கு அறிமுகமானது

இதுவொருபக்கம் இருக்க ஒப்போ நிறுவம் அதன் அடுத்த எப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவும் தயார் ஆகி வருகிறது. மேலும் இம்முறை ஒப்போவின் புதிய எப் சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது ஒப்போ எப்30 சீரிஸ் என்று அழைக்கப்படாது; மாறாக ஒப்போ எப்31 சீரீஸ் (Oppo F31 Series) அறிமுகமாகும்.

மேலும் டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் பகிர்ந்து உள்ள தகவலின் படி, ஒப்போ எப்31 சீரீஸில் 2 மாடல்கள் இல்லாமல் மொத்தம் 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்: ஒரு வெண்ணிலா மாடல்; ஒரு ப்ரோ மாடல் மற்றும் ஒரு ப்ரோ பிளஸ் மாடல். அதாவது இந்த சீரிஸின் கீழ் ஒப்போ எப்31 (Oppo F31), ஒப்போ எப்31 ப்ரோ (Oppo F31 Pro) மற்றும் ஒப்போ எப்31 ப்ரோ பிளஸ் (Oppo F31 Pro Plus) என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை இந்த மூன்று மாடல்களும் முறையே ரூ.25,000 க்கு அருகிலான பட்ஜெட்டில், ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் மற்றும் ரூ.30,000 க்கு மேல் என்கிற பட்ஜெட்டில் அறிமுமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் இவைகள் பெரும்பாலும் இந்த செப்டம்பரிலேயே அறிமுகம் செய்யப்படலாம்.

Best Mobiles in India

English summary
New Oppo 5G Phone Launching On September 9 Oppo A6 Pro Expected Price Specifications Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X