Home
Mobile

ரூ.20,000 கூட இல்ல.. அதுக்கும் கம்மியான விலைக்கு புது OnePlus போன்.. ஆல் இந்தியன்ஸ்.. ரெடியா இருங்க!

இதுவரை வெளியான அத்தனை ஒன்பிளஸ் (OnePlus) ஸ்மார்ட்போன்களுக்கும் இந்தியர்கள் கொடுத்த வரவேற்பை பற்றி ஒற்றை வார்த்தையில் கூற வேண்டுமென்றால்.. தாறுமாறு! அதிலும் குறிப்பாக ஒன்பிளஸ் நிறுவனம் எப்போது பட்ஜெட்-விலை நோர்ட் சீரீஸ் போன்களை அறிமுகம் செய்ய தொடங்கியதோ.. பட்டிதொட்டி எல்லாம் ஃபேமஸ்!

அப்படியான நோர்ட் சீரீஸின் (Nord Series) கீழ் இன்னொரு புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அது என்ன மாடல்? அதன் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

ரூ.20,000 கூட இல்ல.. அதுக்கும் கம்மியான விலைக்கு புது OnePlus போன்!

என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் (OnePlus Nord CE 4 Lite) ஸ்மார்ட்போனை பற்றித்தான். பிஐஎஸ் (BIS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தரநிலைகள் பணியகத்தில் (Bureau of Indian Standards) காணப்பட்டுள்ளதால், இது கூடிய விரைவில் இந்திய சந்தையில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் ஸ்மார்ட்போன் ஆனது கடந்த ஏப்ரல் 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் (OnePlus Nord CE 3 Lite) ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் வெர்ஷன் ஆக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

இது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? மை ஸ்மார்ட் ப்ரைஸின் சமீபத்திய அறிக்கையின்படி, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் ஸ்மார்ட்போன் ஆனது சிபிஎச்2621 (CPH2621 ) என்கிற மாடல் நம்பரின் கீழ் சிங்கப்பூரின் ஐஎம்டிஏ ஒழுங்குமுறை இணையதளத்தில் (Singapore's IMDA regulatory website) காணப்பட்டுள்ளது. இதே மாடல் நம்பர் கீக்பெஞ்ச்சிலும் (Geekbench) காணப்பட்டுள்ளது.

கீக்பெஞ்ச் லிஸ்டிங்கின்படி இது ஸ்னாப்டிராகன் 7+ ஜென் 3 சிப்செட் (Snapdragon 7+ Gen 3) மற்றும் 12ஜிபி ரேம்-ஐ பேக் செய்யும். முன்னதாக அறிமுகமான ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (OnePlus Nord CE 4) மாடலில் கூட ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் (Snapdragon 7 Gen 3) தான் இருந்ததது என்பதால்.. ஒரு லைட் மாடலில் ஸ்னாப்டிராகன் 7+ ஜென்3 சிப்செட் இடம்பெறுவது சாத்தியமில்லை.

பெரும்பாலும் இது ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் (Snapdragon 6 Gen 1) மூலம் இயக்கப்படும். மேலும் இது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS), 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் புல் எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளே, 50-மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா செட்டப் மற்றும் 16-மெகாபிக்சல் செல்பீ கேமரா போன்றவைகளை பேக் செய்யலாம்.

என்ன விலைக்கு வரும்? ஒன்பிளஸ் நார்ட் சிஇ 4 லைட் ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயமானது ரூ.20,000 க்குள் இருக்கும் மற்றும் இது இன்னும் வெளியிடப்படாத ஒப்போ ஏ3 (Oppo A3) ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷன் (Rebranded Version) ஆக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் ஸ்மார்ட்போனின் பேஸிக் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்தியாவில் ரூ.19,999 க்கு அறிமுகமானது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் ஆனது 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனிலும் அறிமுகமானது, அதன் விலை ரூ.21,999 ஆகும். முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், 67W சூப்பர்வூக் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி, 6.72-இன்ச் 120ஹெர்ட்ஸ் எப்எச்டி+ எல்சிடி டிஸ்பிளே, 108-மெகாபிக்சல் ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் 16 எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New OnePlus Smartphone Under Rs 20000 OnePlus Nord CE 4 Lite Launching in India Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X