OnePlus-ன் வெறியாட்டம்.. 24GB ரேம், 1TB ஸ்டோரேஜ், 120Hz BOE டிஸ்பிளேவுடன் புது போன்.. என்ன மாடல்? என்ன விலை?
ஒன்பிளஸ் 12 மற்றும் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமான வேகத்தில் இன்னொரு புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனா.. என்று ஆச்சரியப்படுவதெல்லாம் ஒருபக்கம் இருக்க.. அந்த புதிய ஒன்பிளஸ் மாடலின் முக்கிய அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம்.. நம்மை இன்னும் ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது.
அதென்ன மாடல்? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு அப்படி என்ன விலைக்கு வரும்? இந்த புதிய ஒன்பிளஸ் மாடலானது, ஒன்பிளஸ் 12-ஐ போலவே சீன அறிமுகத்திற்கு பின்னர் இந்திய சந்தைக்கு வருமா? போன்ற கேள்விகளுக்கான பதில்கள் இதோ:

ஒன்பிளஸ் நிறுவனம் கூடிய விரைவில் ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ (OnePlus Ace 3 Pro) என்கிற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என்பது போல் தெரிகிறது. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் உடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோவின் (OnePlus Ace 2 Pro) அப்கிரேடட் வெர்ஷனாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
ஸ்மார்ட் பிகாச்சு (Smart Pikachu) என்கிற டிப்ஸ்டரின் வழியாக ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோவின் முக்கிய அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 SoC) உடன் வரும்.

மேலும் ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ மாடலானது 24ஜிபி LPDDR5x ரேம் மற்றும் 1டிபி UFS 4.0 ஸ்டோரேஜை பேக் செய்யும் என்பதையும் டிப்ஸ்டர் குறிப்பிட்டுள்ளார் எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது கர்வ்டு டிஸ்பிளேவுடன் வரலாம். அதில் 6.78 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே இடம்பெறலாம். பிஓஇ (BOE) ஆல் உருவாக்கப்படும் இந்த டிஸ்பிளே 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் வரலாம்.
முன்னதாக, டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) என்கிற டிப்ஸ்டர் வழியாக தகவல்கள், ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது மெட்டல் மிடில் ஃப்ரேம் மற்றும் கிளாஸ் பேக் பேனலை கொண்டிருக்ககூடும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 14 உடன் அனுப்ப்படும்.

ஒட்டுமொத்தமாக ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ மாடலானது அதன் முன்னோடியான ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ மாடலை விட அதிக அப்டேட்களை பெறும். விலையை பொறுத்தவரை, இது ரூ.35,000 முதல் ரூ.40,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோவின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் சீனாவில் (இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக) ரூ.34,600 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ சீன சந்தையில் மட்டுமே அறிமுகமானது. இந்தியா உட்பட பிற சந்தைகளுக்கு வரவில்லை. பெரும்பாலும் அதே நிலைதான், அதே சீரீஸின் கீழ் அறிமுகமாகும் ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ மாடலுக்கும் இருக்கும்!
ஒருவேளை ஒன்பிளஸ் நிறுவனம் வேறு ஏதேனும் சில திட்டங்களை கொண்டு இருந்தால்.. அதாவது ப்ரீமியம் மற்றும் நோர்ட் சீரீஸிற்கு இடையே ஒரு பிரிவை உருவாக்க விரும்பினால், ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் உலகளாவிய சந்தைகளுக்கு வரலாம். ஆனால் இதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது.
ஏனென்றால் ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோவின் இந்திய அறிமுகமானது ஒன்பிளஸ் 12 மற்றும் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன்களின் விற்பனையை பாதிக்கலாம். நினைவூட்டும் வண்ணம் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதிதான் ஒன்பிளஸ் 12 மற்றும் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகின.


Click it and Unblock the Notifications