2024 ஆரம்பமே அட்டகாசம்! மெட்டல் ஃப்ரேம் உடன் புதிய OnePlus போன்.. ஜன.4-ல் அறிமுகம்.. என்ன மாடல்? என்ன பட்ஜெட்?
இந்தியா உட்பட உலகலாவிய ஸ்மார்ட்போன் சந்தையை பொறுத்தவரை, 2024 ஆம் ஆண்டு ஆரம்பமே அதிரடியாக இருக்க போகிறது. குறிப்பாக ஒன்பிளஸ் நிறுவனத்திற்கு! ஏனென்றால் சீனாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஜன.23 ஆம் தேதியன்று இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் அறிமுகமாக உள்ளது.
இதற்கிடையில் ஒன்பிளஸ் 12-க்கு முன்னதாக மெட்டல் ஃப்ரேம் (Metal Frame) உடன் தகதகவென மின்னும் கோல்ட் கலரில் (Gold Color) இன்னொரு புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஜனவரி 4 ஆம் தேதியே அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது. அதென்ன மாடல்? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன பட்ஜெட்டிற்கு வரும்? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? ஜனவரி 4 ஆம் தேதியன்று ஒன்பிளஸ் ஏஸ் 3 (OnePlus Ace 3) ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாகும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இது ஜன.23 ஆம் தேதியன்று ஒன்பிளஸ் 12 உடன் சேர்ந்து இந்தியாவில் அறிமுகமாகும் அதே ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) ஸ்மார்ட்போன் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்த ஸ்மார்ட்போன் மெட்டல் ஃப்ரேம் உடன் வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒன்பிளஸ் பகிர்ந்துள்ள டீஸரின் வழியாக ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் கோல்ட் கலர் கிளாஸ் டிசைனையும் (Gold Color Glass Design) பார்க்க முடிகிறது. அதாவது இது கிளாஸ் டிசைனின் பளபளப்பை தக்கவைத்துக்கொள்ளும் அதே வேளையில், அதிலிருந்து மிகவும் வேறுபட்ட மெட்டல் உணர்வையும் உருவாக்கும்
ஒன்பிளஸ் சீனாவின் தலைவர் ஆன லூயிஸ் ஜீ-யின் (Louis Jie) கூற்றுப்படி, இந்த வடிவமைப்பிற்கான செலவு சாதாரண கிளாஸ் தொழில்நுட்பத்தை விட மிகவும் அதிகமாகும். நல்ல தோற்றம் (Good Looking) மட்டுமல்ல இது சக்திவாய்ந்த செயல்திறனை (Powerful Performance) வழங்கும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஒன்பிளஸ் 12ஆர்-ல் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது 1.5கே எக்ஸ்1 ஓரியண்டல் ஸ்க்ரீன் (1.5K X1 Oriental Screen) உடன் வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கோல்ட் கலர் ஆப்ஷனில் மட்டுமின்றி ஐயர்ன் க்ரே (Iron Gray) மற்றும் கூல் ப்ளூ (Cool Blue) கலர்களிலும் அறிமுகமாகும்.
ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.78-இன்ச் டிஸ்பிளேவை பேக் செய்யலாம். இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் (Snapdragon 8 Gen 2 Chipset) மூலம் இயக்கப்படலாம். இந்த சிப்செட் 16ஜிப வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்படலாம்.
கேமராக்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனால் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறும். அதில் 50எம்பி ஐஎம்எக்ஸ்890 (50MP IMX890) மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா இடம்பெறலாம்.முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா இருக்கலாம். கடைசியாக இது 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5500mAh பேட்டரியை கொண்டிருக்கலாம்.
ஒன்பிளஸ் 12ஆர் என்ன விலைக்கு இந்தியாவில் அறிமுகமாகும்? பெரும்பாலும் இது ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் ஒன்பிளஸ் 11ஆர் (OnePlus 11R) மாடலுடன் ஒற்றுப்போகலாம். அதாவது இது ரூ.40,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 11ஆர் தற்போது ரூ.39,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? ஒன்பிளஸ் 12-ன் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் விலை ரூ.59,999 முதல் ரூ.62,999 வரைக்குள் இருக்கலாம். மறுகையில் உள்ள ஹை-எண்ட் 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.64,999 முதல் ரூ.67,999 வரைக்குள் இருக்கலாம்.


Click it and Unblock the Notifications








