செஞ்சிட்டா போச்சு.. வரலாற்றில் முதல் முறை.. ரூ.18000 க்கு புது OnePlus N6 போன்.. எப்போது அறிமுகம்?
ஒருபக்கம் - கடந்த சில மாதங்களாகவே ஸ்மார்ட்போன்க்களின் விலைகள் சீராக உயர்ந்து வருகிறது. இன்னொரு பக்கம் - ஒன்பிளஸ் நிறுவனமானது கடந்த பல ஆண்டுகளாக விலகி இருந்த ரூ.20,000 க்குள் என்கிற பிரிவில் நுழைவதன் மூலம் பட்ஜெட்-விலை ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு சர்ப்ரைஸ் அளித்துள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய போனான ஒன்பிளஸ் என்6 (OnePlus N6) மாடலை, வருகிற ஜூன் 30 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிரபல இ-காமர்ஸ் வலைத்தளம் ஆன அமேசான் இந்தியா வழியாக வாங்க கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த அறிமுகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இது புதிய ஒன்பிளஸ் என் சீரிஸின் வருகையை குறிக்கிறது. இது நார்ட் சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கு கீழே இருக்கும் என எதிர்பார்க்கப்படும், பட்ஜெட்டை மையமாக கொண்ட ஒரு சீரீஸ் ஆகும்.
இப்போதைக்கு, நார்ட் சிஇ6 லைட் தான் இந்தியாவில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் மிகவும் மலிவு விலை ஸ்மார்ட்போனாக உள்ளது, இதன் ஆரம்ப விலை ரூ.22,999 ஆகும். ஆக ஒன்பிளஸ் என்6 மாடலின் விலை இதைவிட குறைவாகவே இருக்கும். இன்னும் குறிப்பிட்டு சொல்லப்போனால் ரூ.20,000 க்குள் இருக்கும்.
ஒன்பிளஸ் என்6 டிசைன் மற்றும் அம்சங்கள்: ஒன்பிளஸ் நிறுவனமானது அதன் என்6 ஸ்மார்ட்போனின் எந்த அம்சங்களையும் இன்னும் வெளியிடவில்லை, ஆனால் அதிகாரப்பூர்வ டீசர்கள் ஒன்பிளஸ் என்6 குறைந்தது இரண்டு கலர் ஆப்ஷன்களில் வருவதை வெளிப்படுத்துகின்றன - ஒரு மென்மையான மின்ட் க்ரீன் மற்றும் ஒரு டார்க் கிரே கலர்.
இந்த ஸ்மார்ட்போன், ஒன்பிளஸின் சமீபத்திய ஹார்ட்வேர் தத்துவத்தை நெருக்கமாகப் பின்பற்றும் ஒரு நேர்த்தியான, எளிமையான வடிவமைப்பு மொழியை கொண்டுள்ளது. அதாவது பேக் பேனல் கர்வ்டு எட்ஜ்களுடன் பிளாட் ஆக தோன்றுகிறது, அதே சமயம் கேமரா மாட்யூல் மேல் இடது மூலையில் அமைந்துள்ளது. இந்த மாட்யூலில், டேப்லெட் வடிவ ஃபிளாஷ் யூனிட்டுடன் செங்குத்தாக அடுக்கப்பட்ட இரண்டு பெரிய சர்குலர் ஷேப்ட்டு கேமரா ரிங்ஸ் உள்ளன.
ஒன்பிளஸ் லோகோ பேக் பேனலின் மையத்தில் அமைந்துள்ளது. முன்புறத்திலிருந்து பார்க்கும்போது, இந்த ஸ்மார்ட்போன் ஸ்லிம் ஆன பெசல்களையும் மையத்தில் ஒரு பஞ்ச்-ஹோல் கேமராவையும் கொண்டுள்ளது. ஒட்டுமொத்த வடிவமைப்பும் பகட்டான அம்சங்களை விட எளிமைக்கே முன்னுரிமை அளிக்கிறது; இது ஒன்பிளஸ் தனது சமீபத்திய ஸ்மார்ட்போன் சீரீஸில் அதிகளவில் பின்பற்றி வரும் ஒரு அணுகுமுறையாகும்.
இந்தியாவில் ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் விலை: இப்போதைக்கு இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும், ஒன்பிளஸ் நிறுவனத்தின் என் சீரீஸ் (N series) ரூ.20,000 க்கும் குறைவான விலைப்பிரிவை இலக்காகக் கொண்டிருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இ
இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், இந்தியாவில் இந்நிறுவனத்தின் வரலாற்றிலேயே, மிகவும் மலிவு விலை ஸ்மார்ட்போன் சீரீஸ் ஆக இது அமையும். இதன் மூலம், பட்ஜெட் சந்தையில் ஏற்கனவே வலுவான இடத்தை பிடித்துள்ள ரெட்மி (Redmi), போக்கோ (POCO), லாவா (Lava) மற்றும் ரியல்மி (Realme) ஆகியவற்றின் பிரபலமான மாடல்களுடன் ஒன்பிளஸ் என்6 நேரடியாகப் போட்டியிடும்.
குறைந்த விலையிலும் கூட அதிக 'ரெப்ஃப்ரெஷ் ரேட்' (refresh rate) கொண்ட டிஸ்பிளேக்கள், பெரிய பேட்டரிகள், சிறந்த கேமராக்கள் மற்றும் நீண்ட கால சாஃப்ட்வேர்ஆதரவு ஆகியவற்றை இன்றைய வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பதால், இத்துறையில் போட்டி மிகவும் கடுமையாக உள்ளது. அதை ஒன்பிளஸ் சமாளிக்குமா என்பது ஜூன் 20 ஆம் தேதி அன்று தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications