உண்மையாவே இது OnePlus போன் தானா.. மெட்டல் ஃபிரேம், செராமிக் பாடி, 24GB ரேம், 6500mAh பேட்டரி, 100W சார்ஜிங்!
அட உண்மையாகவே இது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் தானா என்று கேட்கத்தோன்றும் படியான அம்சங்களுடன் 2 புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் தயாராகி வருகின்றன. அவைகள் ஒன்பிளஸ் ஏஸ் 5 (OnePlus Ace 5) மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 5 ப்ரோ (OnePlus Ace 5 Pro) மாடல்கள் ஆகும்.
சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் 5 ஆக அறிமுகமாகும் மாடல், இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) என்கிற பெயரில் - ஒன்பிளஸ் 13 க்கு பிறகு அல்லது ஒன்பிளஸ் 13 உடன் சேர்ந்து - அறிமுகமாகும் என்பதால், ஒன்பிளஸ் ஏஸ் 5 சீரீஸின் முக்கிய அம்சங்களை மற்றும் விலை விவரங்களை பற்றி நாம் தெரிந்து வைத்துக்கொள்வதில் எந்த தவறும் இல்லை!

சீன தொழில்நுட்ப பிராண்ட் ஆன ஒன்பிளஸ் அதன் ஏஸ் 5 சீரீஸின் வெளியீட்டு தேதியை இன்னும் அதிகாரப்பூர்வ வெளியிடவில்லை. ஆனாலும் கூட இவைகள் எப்படியும் 2024 டிசம்பர் மாதத்திற்குள் அல்லது 2025 ஜனவரியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை உறுதி செய்யும்படியாக இவ்விரு ஸ்மார்ட்போன்களை பற்றிய பெரும்பாலான முக்கிய அம்சங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன.
டிப்ஸ்டர் ஸ்மார்ட் பிக்காச்சு (Tipster Smart Pikachu) வழியாக கிடைத்த தகவலின்படி, ஒன்பிளஸ் ஏஸ் 5 (ஒன்பிளஸ் 13ஆர்) ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் கொண்டு இயங்கும். இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் உடன் வந்த ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும் போது, இதுவொரு நல்ல அப்கிரேட் ஆகும்.
மறுகையில் உள்ள ஒன்பிளஸ் ஏஸ் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது இன்னும் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டுடன் அறிமுகமாகும் என ஊகிக்கப்படுகிறது. இதுதவிர்த்து ஒன்பிளஸ் ஏஸ் 5 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் மெட்டல் மிடில் ஃப்ரேம், செராமிக் பாடி மற்றும் 24ஜிபி வரையிலான ரேம் வரை ஆகிய அம்சங்களும் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் ஏஸ் 5 அல்லது ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது BOE-யின் 6.78-இன்ச் X2 8T LTPO 2D டிஸ்பிளேவை கொண்டிருக்கும். கேமராக்களை பொறுத்தவரை இதில் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 8-மெகாபிக்சல் செகண்டரி சென்சார் + 2-மெகாபிக்சல் கேமராவை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்டுடன் வரலாம்; முன்பக்கத்தில் 16-மெகாபிக்சல் செல்பீ ஷூட்டர் பேக் செய்யப்படலாம்
பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போனில் 6300எம்ஏஎச் பேட்டரி பேக் செய்யப்படலாம். மறுகையில் உள்ள ஒன்பிளஸ் ஏஸ் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6500எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இரண்டு போன்களும் 100W வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் ஏஸ் 5 அல்லது ஒன்பிளஸ் 13ஆர் என்ன விலைக்கு வரும்? விலை நிர்ணயத்தில் 2 வகையான யூகங்கள் உள்ளன. சில தகவல்கள்ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.52,990 முதல் தொடங்கும் என்று கூறுகின்றன. சில தகவல்கள் இது ரூ.50,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வரும் என்று கூறுகிறது.
சீனாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 1-120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.82-இன்ச் 2கே+ LTPO AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது, ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 13-ன் கேமராக்களை பொறுத்தவரை இது 50எம்பி ப்ரைமரி கேமரா + 114° அல்ட்ரா-வைட் 50எம்பி கேமரா + 120x டிஜிட்டல் ஜூம் உடனான 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவைகள் உள்ளன. முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. கடைசியாக இது 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் உடனான 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications