Home
Mobile

இன்று விற்பனைக்கு வருகிறது OnePlus நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி: என்ன விலை? என்னென்ன சலுகைகள்?

ஒன்பிளஸ் நிறுவனம் அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிறுவனம் சமீபத்தில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று தொடங்குகிறது. அதுவும் இந்த புதிய போனை ஒன்பிளஸ் ஆன்லைன் ஸ்டோர் மற்றம் அமேசான் தளத்தில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி போன் ரூ.19,999-விலையில் வாங்க முடியும்.

இன்று விற்பனைக்கு வருகிறது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி: என்ன விலை?

பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட ரூ.21,999-விலையில் வாங்கக் கிடைக்கும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும். இதுதவிர பல்வேறு சிறப்பு சலுகைகள் இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே கொண்டு இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் ப்ரொடெக்ஷன் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய ஒன்பினஸ் போன் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 695 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. எனவே கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக மேம்பட்ட செயல்திறன் வழங்குகிறது ஸ்னாப்டிராகன் ப்ராசஸர். ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட நிறுவனத்தின் சொந்த ஆக்ஸிஜன்ஓஎஸ் 13.1 உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதேபோல் அட்ரினோ 619 ஜிபியு வசதி இதில் உள்ளது.

108 மெகாபிக்சல் மெயின் கேமரா (சாம்சங் எச்எம்6 சென்சார்; எஃப் /1.75 சென்சார்; இஐஎஸ்) + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா + 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்.

இன்று விற்பனைக்கு வருகிறது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி: என்ன விலை?

67W சூப்பர்வூக் வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதேசமயம் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமானது வெறும் 30 நிமிடங்களில் 0 - 80% வரை பேட்டரியை சார்ஜ் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், கேம் ஃபோகஸ் மோட், நாய்ஸ் கேன்சலேஷன் ஆதரவுடனான டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, 3.5மிமீ ஆடியோஜாக், ப்ளூடூத் 5.1, யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி விருப்பங்களைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
new OnePlus Nord CE3 Lite 5G phone is on sale today with an offer: check price,specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X