கனவு விலை.. கலக்கல் அம்சங்கள்.. OnePlus Nord CE 3 Lite 5G அறிமுகம்.. இந்திய விற்பனை பிச்சுக்க போகுது!
கனவில் கூட எதிர்பார்க்காத விலை நிர்ணயம் மற்றும் கலக்கலான அம்சங்களுடன் ஒன்பிளஸின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி (OnePlus Nord CE 3 Lite 5G) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை என்ன? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? எப்போது முதல் விற்பனை? இதோ விவரங்கள்:
என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? இது 91.4 சதவீதம் ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ மற்றும் 120 ஹெர்ட்ஸ் டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.72-இன்ச் ஃபுல்-எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதன் டிஸ்பிளே கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் ப்ரொடெக்ஷன் உடன் வருகிறது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட நிறுவனத்தின் சொந்த ஆக்ஸிஜன்ஓஎஸ் 13.1 உடன் வரும் இந்த லேட்டஸ்ட் ஒன்பிளஸ் போனானது ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 695 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது, இது அட்ரினோ 619 ஜிபியு மற்றும் 8ஜிபி வரையிலான LPDDR4X ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை, 108 மெகாபிக்சல் மெயின் கேமரா (சாம்சங் எச்எம்6 சென்சார்; எஃப் /1.75 சென்சார்; இஐஎஸ்) + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா + 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
மேலும் இது 67W சூப்பர்வூக் வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமானது வெறும் 30 நிமிடங்களில் 0 - 80% வரை பேட்டரியை சார்ஜ் செய்யும். மேலும், இதை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், ஒரு நாள் முழுவதும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், கேம் ஃபோகஸ் மோட், நாய்ஸ் கேன்சலேஷன் ஆதரவுடனான டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, 3.5மிமீ ஆடியோஜாக் , ப்ளூடூத் 5.1 யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி விருப்பங்கள் ஆகியவைகளை கொண்டுள்ளது.
என்ன விலை? ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேஸிக் வேரியண்ட் ஆன 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஆப்ஷன் ரூ.19,999 க்கும், ஹை-எண்ட் வேரியண்ட் ஆன 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.21,999 க்கும் வாங்க கிடைக்கும்.
எப்போது விற்பனை? பாஸ்டல் லைம் மற்றும் க்ரோமாடிக் கிரே என்கிற 2 கலர் ஆப்ஷகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த லேட்டஸ்ட் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் தொடங்கும். இது ஒன்பிளஸ் ஆன்லைன் ஸ்டோர், அமேசான் இந்தியா மற்றும் பிற ரீடெய்ல் ஸ்டோர்ஸ் வழியாக வாங்க கிடைக்கும்.
அறிமுக சலுகைகள் உண்டா? ஐசிஐசிஐ பேங்க் கார்டுகள் மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம், ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகமானது. அதுவும் கூட ரூ.19,999 க்கு தான் அறிமுகமானது.


Click it and Unblock the Notifications