Home
Mobile

தேதி குறிச்சாச்சு.. ரூ.18,999 ரெடியா வச்சிக்கோங்க.. OnePlus-ன் இந்த 5G போனை கண்ணை மூடிட்டு வாங்கலாம்!

பிளாக்ஷிப் மாடல்களுக்கு இணையான எண்ணிக்கையில் ஒன்பிளஸின் (OnePlus) பட்ஜெட் விலை மாடல்களும் அறிமுகமாகி கொண்டே தான் இருக்கின்றன. அந்த வரிசையில் ரூ.18,999 க்கு ஒன்பிளஸின் பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்று இந்திய சந்தையில் அறிமுகமாக தயாராக உள்ளது போல் தெரிகிறது.

நாம் இங்கே பேசுவது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி-ஐ பற்றித்தான். ஒன்பிளஸ் அதன் 11 சீரிஸின் கீழ் 2 மாடல்களை அறிமுகம் செய்ததை தொடர்ந்து, நோர்ட் சீரீஸின் கீழ் 3 புதிய மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது போல் தெரிகிறது. அதிலொரு மாடல் தான் - ஒன்பிளஸ் நோர்ட் சிஇ3 லைட் 5ஜி!

OnePlus நோர்ட் CE3 லைட் 5G எப்போது,  என்ன விலைக்கு அறிமுகமாகும்?

நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி உட்பட வரவிருக்கும் நோர்ட் 3 சீரிஸ் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவுமே வெளியாகவில்லை என்றாலும் கூட, இந்த சீரீஸின் கீழ் என்னென்ன மாடல்கள் அறிமுகமாகும்? அவைகள் எப்போது அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? போன்ற விவரங்கள் தொடர்ச்சியாக வெளிவந்தபடி உள்ளன (நெருப்பில்லாமல் புகையுமா)!

நோர்ட் 3 சீரீஸின் கீழ் என்னென்ன போன்கள் வெளியாகும்? முன்னரே குறிப்பிட்டபடி ஒன்பிளஸ் நோர்ட் 3 சீரீஸின் மொத்தம் கீழ் 3 மாடல்கள் வெளியாகலாம்: ஒன்பிளஸ் நோர்ட் 3 (OnePlus Nord 3), ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 (OnePlus Nord CE 3) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் (OnePlus Nord CE 3 Lite).

நோர்ட் 3 & நோர்ட் சிஇ 3 எப்போது அறிமுகமாகும்? இந்த இரண்டுமே வருகிற ஜூலையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நோர்ட் 3, சமீபத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் ஏஸ் 2வி ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷனாக இருக்கலாம். இது ஸ்னாப்டிராகன் 782ஜி சிப்செட்டை பேக் செய்யும் என்றும் கூறப்படுகிறது.

நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி எப்போது அறிமுகமாகும்? இந்த கட்டுரையின் "நாயகனான" நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி, வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி அறிமுகமாகும் என்கிற தகவல் கிடைத்துள்ளது. இது ரூ.18,999 க்கு அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டும் உண்மையானால், இந்த 5ஜி போன் பலரின் கைகளில் தவழுமென்பதில் சந்தேகமே வேண்டாம்!

நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி-யில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இதில் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், இரண்டு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்ஸ் ( 8 ஜிபி ரேம் + 128 ஜிபி; 12 ஜிபி ரேம் + 256 ஜிபி) போன்ற அம்சங்கள் இடம்பெறலாம்.

கேமராக்களை பொறுத்தவரை, 108எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமராவை பேக் செய்யலாம். மேலும் இது 5,000mAh பேட்டரியுடன் வருமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அது 67W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கலாம்.

கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஒன்பிளஸின் சொந்த ஆக்ஸிஜென் 13 யுஐ மூலம் இயக்கப்படலாம். கடைசியாக இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரண்ட் ஸ்கேனர் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டிற்கான ஆதரவையும் கொண்டிருக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New OnePlus 5G Phone For Rs 18999 Expected To Launch On April 4 Check Nord CE 3 Lite Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X