2025 நியூ இயர்க்கு புது 5G Phone கன்ஃபார்ம்.. 5 Honor 5ஜி போன்கள் மீது அடேங்கப்பா ஆபர்.. டிச.16 வரை மட்டுமே!
2024 ஆம் ஆண்டை சிறப்பாக முடிக்கவும் மற்றும் 2025 புத்தாண்டை சிறப்பாக தொடங்கவும், ஹானர் நிறுவனமானது தனது லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன்களின் மீதான சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இந்நிறுவனம் பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியாவில் (Amazon India) வஹானர் டேஸ் (Honor Days) என்கிற சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது.
டிசம்பர் 12 ஆம் தேதி முதல் தொடங்கிய இந்த ஹானர் டேஸ் விற்பனையானது டிசம்பர் 16 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இதன் கீழ் மொத்தம் 5 ஹானர் 5ஜி ஸ்மார்ட்போன்கள் மீது நேரடி தள்ளுபடி, பேங்க் ஆபர் மாறும் எக்ஸ்சேன்ஜ் ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த ஹானர் 5ஜி ஸ்மார்ட்போன்கள் மீது என்னென்ன ஆபர்கள் கிடைக்க்கிறது? இதோ விவரங்கள்:

01. ஹானர் 200 லைட் 5ஜி (Honor 200 Lite 5G) ஸ்மார்ட்போன் மீதான ஆபர்: 16ஜிபி வரையிலான ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ், 108எம்பி மற்றும் 50எம்பி ஏஐ போர்ட்ரெயிட் கேமராவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ.24,999 க்கு பதிலாக ரூ.6000 தள்ளுபடியை பெற்று ரூ.18,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
02. ஹானர் 200 5ஜி (Honor 200 5G) ஸ்மார்ட்போன் மீதான ஆபர்: 50எம்பி ஸ்டுடியோ ;லெவல் ஏஐ போர்ட்ரெயிட் கேமரா மற்றும் 4000 நிட்ஸ் நேச்சுரல் டோன் டிஸ்பிளேவை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ரூ.39,999 க்கு பதிலாக ரூ.13,000 தள்ளுபடியை பெற்று ரூ.26,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
03. ஹானர் 200 ப்ரோ 5ஜி (Honor 200 Pro 5G) ஸ்மார்ட்போன் மீதான ஆபர்: ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட், ஏஐ வார்டு மேஜிக் ஓஎஸ் 8.0 உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ரூ.59,999 க்கு பதிலாக ரூ.12,000 தள்ளுபடியை பெற்று ரூ.47,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
04. ஹானர் எக்ஸ்9பி 5ஜி (Honor X9b 5G) ஸ்மார்ட்போன் மீதான ஆபர்: எஸ்ஜிஸ் சான்றிதழ் பெற்ற கர்வ்டு டிஸ்பிளே, 108எம்பி லாஸ்லெஸ் கேப்சர் கேமரா உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ரூ.30,999 க்கு பதிலாக ரூ.6,000 தள்ளுபடியை பெற்று ரூ.24,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
05. ஹானர் மேஜிக் 6 ப்ரோ 5ஜி (Honor Magic 6 Pro 5G) ஸ்மார்ட்போன் மீதான ஆபர்: 180எம்பி ஓஐஎஸ் பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ.1,09,999 க்கு பதிலாக ரூ.20,000 தள்ளுபடியை பெற்று ரூ.89,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி மேற்கண்ட 5 ஹானர் 5ஜி ஸ்மார்ட்போன்கள் மீதான சலுகைகள் டிசம்பர் 16 வரை கிடைக்கும்.
ஹானர் 200 5ஜி மற்றும் ஹானர் 200 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களின் விரிவான அம்சங்களை பொறுத்தவரை ஹானர் 200 5ஜி மாடலானது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் எப்எச்டி பிளஸ் ஓஎல்இடி கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ஹானர் 200 ப்ரோ 5ஜி மாடலானது சற்றே பெரிய 6.78-இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
ப்ராசஸரை பொறுத்தவரை, ஹானர் 200 5ஜி மாடலனது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட்டை பேக் செய்கிறது. ஹானர் 200 ப்ரோ 5ஜி மாடலானது ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட் உடன் வருகிறது. கேமராக்களை பொறுத்தவரை, ஹானர் 200 5ஜி மற்றும் ஹானர் 200 ப்ரோ 5ஜி ஆகிய இரண்டுமே ஒரே மாதிரியான கேமராக்களை கொண்டுள்ளன.
இரண்டு மாடல்களிலும் 50 மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் கேமரா + 12எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் + 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர் என்கிற ட்ரிபிள் ரியர் கேமராஸ் செட்டப் உள்ளது. ஆனால் ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டில் சோனி ஐஎம்எக்ஸ்906 ப்ரைமரி சென்சார் உள்ளது; ப்ரோ வேரியண்ட்டில் எச்9000 ப்ரைமரி சென்சார் உள்ளது. முன்பக்கத்தில் இரண்டுமே 50 மெகாபிக்சல் செல்பீ கேமராக்களை கொண்டுள்ளன.
கடைசியாக பேட்டரியை பொறுத்தவரை, இவ்விரு ஹானர் 200 5ஜி சீரீஸ் ஸ்மார்ட்போன்களுமே 100W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5200mAh பேட்டரியை கொண்டுள்ளன. ஆனால் ஹானர் 200 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் கூடுதலாக 66W வயர்லெஸ் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் செய்வதற்கான ஆதரவு உள்ளது.


Click it and Unblock the Notifications








