Home
Mobile

அல்வா மாதிரி 2 ஆஃபர்.. ஒரே நேரத்துல 2 Samsung போன்கள் மீது அபார விலை குறைப்பு.. என்ன மாடல்கள்?

சாம்சங் (Samsung) நிறுவனம் தனது 2 கேலக்ஸி ஏ-சீரிஸ் (Galaxy A-Series) ஸ்மார்ட்போன்களின் மீது திடீர் விலைக்குறைப்பை அறிவித்துள்ளது. அதென்ன மாடல்கள்? அவைகளின் பழைய மற்றும் புதிய விலை நிர்ணயம் என்ன? அவைகள் என்னென்ன அம்சங்களை பேக் செய்கின்றன? இதோ விவரங்கள்:

அதென்ன மாடல்கள்? விலைக்குறைப்பை பெற்றுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ34 (Samsung Galaxy A34) மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ54 (Samsung Galaxy A54) மாடல்கள் ஆகும். நினைவூட்டும் வண்ணம் இவ்விரு மிட்-ரேன்ஜ் மாடல்களும் கடந்த 2023 மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டன.

ஒரே நேரத்துல 2 Samsung போன்கள் மீது அபார விலை குறைப்பு!

சாம்சங் கேலக்ஸி ஏ34 மீதான சலுகைகள்: ரூ.30,999க்கு அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஏ34 ஸ்மார்ட்போன் தற்போது ரூ.26,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது ஐசிஐசிஐ வங்கி மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளின் வழியாக கிடைக்கும் ரூ.2000 உடனடி கேஷ்பேக் மற்றும் ரூ.2000 என்கிற கூடுதல் பேங்க் கேஷ்பேக்குடன் சேர்த்து ரூ.4000 என்கிற மொத்த சலுகையின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ54 மீதான சலுகைகள்: இதுவும் ரூ.4,000 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. இந்த மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன் ரூ.40,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது, இப்போது ரூ.36,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் ஸீரோ டவுன் பேமண்ட் உடனான 12 மாத நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பமும் அணுக கிடைக்கிறது .

சாம்சங் கேலக்ஸி ஏ34 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1080 ப்ராசஸர் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி வரையிலான ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை, இது இரண்டு ஆப்ஷன்களில் வருகிறது: 128ஜிபி மற்றும் 256ஜிபி.

டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 1080 x 2400 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.6-இன்ச் FHD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. நீர்-எதிர்ப்பு வடிவமைப்பை கொண்டுள்ள இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் ஆனது 25W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது.

ஆண்ட்ராய்டு 13 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் கீழ் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 48எம்பி மெயின் கேமரா (எஃப்/1.8) + 8எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் கேமரா (எஃப்/2.2) + 5எம்பி மேக்ரோ கேமரா உள்ளது. முன்பக்கத்தில், இது 13எம்பி (எஃப் /2.2) செல்பீ கேமராவை கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ54 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: இது 1080 x 2400 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.4-இன்ச் FHD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. 5ஜி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் நிறுவனத்தின் சொந்த எக்ஸினோஸ் 1380 சிப்செட்டில் இயங்குகிறது, இது 8ஜிபி வரை ரேம்-ஐ பேக் செய்கிறது.

இதுவும் 128ஜிபி மற்றும் 256ஜிபி என்கிற 2 இன்டர்னல் ஸ்டோரேஜ்களை கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் உடன் வரும் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் டூயல் சிம் ஆதரவை வழங்குகிறது மற்றும் கூடுதல் பாதுகாப்பிற்காக இன் டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரையும் கொண்டுள்ளது.

தூசி மற்றும் நீர்-எதிர்ப்பு வடிவமைப்புடன் வரும் சாம்சங் கேலக்ஸி ஏ54 ஆனது ஸ்டீரியோ ஸ்பீக்கர்களையும் கொண்டுள்ளது. இது ஒரு வலுவான 5000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறத, அது 25W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. கேமராக்களை பொறுத்தவரை, இதில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது.

அதில் 50எம்பி மெயின் கேமரா + 12எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா + 5MP டெப்த் சென்சார் உள்ளன. இதன் கேமரா செட்டப்பில் ஒரு எல்இடி ஃபிளாஷும் அடக்கம். முன்பக்கத்தை பொறுத்தவரை, செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் 32எம்பி கேமரா உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New offers and discounts announced on Samsung Galaxy A54 and Galaxy A34 smartphones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X