அடிச்சு தூக்கும் ஆர்டர்கள்.. அல்டிமேட் விலை குறைப்பு.. ரூ.10000க்கு இறங்கிய பலே போன்.. என்ன மாடல்?
பிரபலமான மோட்டோரோலா (Motorola) ஸ்மார்ட்போன் ஒன்று, முழுதாக 35% தள்ளுபடியை பெற்று தற்போது ரூ.10,000 பட்ஜெட்டிற்கு இறங்கி வந்துள்ளது. அதென்ன மாடல்? அதன் பழைய விலை என்ன? புதிய விலை நிர்ணயம் என்ன? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:
நாம் இங்கே பேசுவது - மோட்டோரோலாவின் மோட்டோ ஜி32 (Moto G32) ஸ்மார்ட்போனை பற்றித்தான். பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart), இந்த ஸ்மார்ட்போனின் மீது பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. தற்போது இது ரூ.16,999 க்கு பதிலாக 35 சதவீத நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது.

மேற்கொண்ட ஆஃபர் விலையானது மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜின் விலையாகும். இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனிலும் வாங்க கிடைக்கும். இது பிளிப்கார்ட் வழியாக ரூ.18,999 க்கு பதிலாக ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது.
இது மட்டுமின்றி, மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போன் மீது எக்ஸ்சேஞ்ச் சலுகை (Exchange Offer) மற்றும் வங்கி சலுகைகளும் (Bank Offer) அணுக கிடைக்கிறது. அவைகளையும் திறம்பட பயன்படுத்தும் பட்சத்தில் மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போனின் இறுதி விலையை (Final Price) இன்னும் குறைக்க முடியும்.
எக்ஸ்சேஞ்ச் ஆஃபரை பொறுத்தவரை, உங்களுக்கு ரூ.10,450 வரையிலான தள்ளுபடி கிடைக்கும். இதற்காக நீங்கள், உங்களுடைய பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்ய வேண்டும். உங்களுக்கான எக்ஸ்சேன்ஜ் வேல்யூ (Exchange Value) ஆனது உங்களுடைய பழைய போனின் மாடல் மற்றும் அது வேலை செய்யும் நிலைமைகளை பொறுத்து வேறுபடும் என்பதை நினைவில் கொள்ளவும்.
நீங்கள் வசிக்கும் பகுதியில்ல் எக்ஸ்சேன்ஜ் சலுகை அணுக கிடைக்குமா இல்லையா என்பதை அறிந்துகொள்ள பிளிப்கார்ட்டில் உங்கள் பின் கோட்-ஐ (PIN Code) உள்ளிட்டு முன்னரே சரிபார்த்து கொள்ளவும். வங்கி சலுகைகளை பொறுத்தவரை, மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போனை வாங்குவதற்காக பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் (Flipkart Axis Bank) கார்டுகளை பயன்படுத்தும் பட்சத்தில் உங்களுக்கு 5% கேஷ்பேக் (Cashback) கிடைக்கும்.
அம்சங்களை பொறுத்தவரை, மோட்டோரோலா மோட்டோ ஜி32 ஆனது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh Rate) உடனான 6.5 இன்ச் எஃப்எச்டி+ அல்ட்ரா-வைட் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா-வைட் லென்ஸ் + 2 எம்பி சென்சார் உள்ளன.
முன்பக்கத்தை பொறுத்தவரை, செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் 16 எம்பி செல்பீ கேமரா உள்ளது. ஸ்னாப்டிராகன் 680 ஆக்டா-கோர் (Snapdragon 680 Octa-core) ப்ராசஸர் உடன் இயங்கும் இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் ஆனது 5000mAh லித்தியம் பாலிமர் பேட்டரியுடன் வருகிறது.
கடைசியாக மோட்டோரோலா மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போன் ஆனது நான்கு வெவ்வேறு கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது: அவைகள் சாடின் சில்வர் (Satin Silver), மினரல் கிரே (Mineral Grey), ரோஸ் கோல்ட் (Rose Gold), சாடின் மெரூன் (Satin Maroon) ஆகும்.


Click it and Unblock the Notifications








