அடடே Pokemon தீம்-ஆ.. ரூ.30,000 பட்ஜெட்டில் Nothing Phone 3.. முதல் டெலிபோட்டோ கேமரா செட்டப்!
நத்திங் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு "ஸ்பெஷல்" ஆக ஒரு இமெயிலை அனுப்பி குறிப்பிடும் அளவிற்கு நத்திங் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆன கார்ல் பெய், தனது நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போனை மிகவும் முக்கியமானதாக கருதுகிறார். அது நத்திங் போன் 3 (Nothing Phone 3) மாடலாகும்.
நத்திங் போன் 3 மாடல் எப்போது அறிமுகமாகும்? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்கிற விவரங்கள் முதல்.. நத்திங் போன் 3 அறிமுகத்திற்கு பின்னர் நத்திங் போன் 3ஏ மற்றும் நத்திங் போன் 3ஏ பிளஸ் ஆகிய மாடல்கள் அறிமுகமாகி, நத்திங் போன் 3 சீரிஸ் விரிவுபடுத்தப்படும் என்பது வரையிலாக.. நத்திங் நிறுவனத்தின் அடுத்தடுத்த திட்டங்கள் குறித்த பல தகவல்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டன.

இதற்கிடையில் நத்திங் போன் 3 குறித்து இன்னொரு சுவாரசியமான மற்றும் அதிகாரபூர்வமான ஒரு தகவல் வெளியாகியுள்ளது. நத்திங் நிறுவனம் ஒரு புதிய டீசரை பகிர்ந்துள்ளது. அதன் வழியாக நத்திங் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போனுடன் சேர்த்து ஒரு ஸ்பெஷல் எடிஷன் அறிமுகமாகலாம் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
இதுகுறித்த ட்வீட்டில், நத்திங் பிராண்ட் ஆனது ஜென் 1 போகிமொன் ஆர்கனைனின் படத்தை பகிர்ந்துள்ளது. இது நத்திங் x அர்கானின் ஸ்பெஷல் எடிஷனின் அறிமுகத்தை குறிப்பதாக இருக்கலாம். இது உண்மையாக இருந்தால், நத்திங்கின் அடுத்த ஸ்மார்ட்போன் போகிமொனின் நிறங்கள் அல்லது பிற வகையான வடிவமைப்பு மொழிகளை கொண்டிருக்கலாம்.
முன்னதாக அறிமுகமான எந்தவொரு நத்திங் ஸ்மார்ட்போனுமே லிமிடெட் எடிஷன் ஆக அல்லது ஸ்பெஷல் எடிஷன் ஆக அறிமுகமானதில்லை. எனவே எல்லாமே சரியாக நடந்தால், 2025 இல் அறிமுகமாகும் அடுத்த நத்திங் போன் ஆனது முற்றிலும் வேறுபட்ட ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
ஒருவேளை ஆர்கனைன் என்பது - நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் குறியீட்டுப் பெயராக இருக்கலாம். எனவே இதுவொரு நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனுக்கான டீஸராக கூட இருக்கலாம். இது தவிர நத்திங் நிறுவனத்தின் ட்வீட்டிலிருந்து நாம் புரிந்துகொள்ளக்கூடிய விஷயங்கள் எதுவுமே இல்லை. இவ்விரண்டில் எது உண்மை என்கிற விவரங்கள் அடுத்தடுத்து கிடைக்கும் தகவல்களை வைத்தே உறுதிப்படுத்த முடியும்.
நத்திங் போன் 3 எப்போது அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு வரும்? இது 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் அறிமுகப்படுத்தப்படலாம். இந்த மாடல் "யூஸர் இன்டர்பேஸ்" இல் திருப்புமுனை மிக்க புதுமைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இசிம் (eSIM) ஆதரவு, ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் ஆகிய முக்கிய அம்சங்களை பேக் செய்யலாம். டெலிஃபோட்டோ கேமராவை வழங்கும் பிராண்டின் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.30,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.
நத்திங் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு கார்ல் பெய் அனுப்பிய இமெயிலில் என்ன உள்ளது? நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான இவான் ப்ளாஸ் (Evan Blass) வலுயாக லீக் ஆன அந்த இமெயிலில் - நத்திங் நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட்போனை மார்ச் 2025 க்குள் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அது நத்திங் போன் 3 ஆக இருக்கலாம்.
மேலும் லீக் ஆன இமெயிலில் நத்திங் போன் 3 மாடல் ஆனது நத்திங் பிராண்டிற்கான ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று கார்ல் பெய் விவரிக்கிறார், நத்திங் போன் 3 மாடலின் வழியாக யூஸர் இன்டர்பேஸில் சில திருப்புமுனைமிக்க புதுமைகள் அறிமுகப்படுத்தப்படும். இந்த ஸ்மார்ட்போன் ஏஐ-பவர்டு பிளாட்ஃபார்மை நோக்கிய நமது முதல் படியாக இருக்கும் என்று கார்ல் பெய் கூறியுள்ளார்!


Click it and Unblock the Notifications








