இதோ வந்துட்டேன்.. Nothing Phone 2.. இன்று இந்தியாவில் அறிமுகம்.. சரியான விலை என்ன?
ஒருவழியாக.. நத்திங் நிறுவனத்தின் இரண்டாவது ஸ்மார்ட்போனிற்கான நீண்ட நெடிய காத்திருப்பு இன்றுடன் முடிகிறது. ஏனென்றால் நத்திங் போன் 2 (Nothing Phone 2) ஸ்மார்ட்போனானது இன்று, ஜூலை 11 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது சரியாக எத்தனை மணிக்கு அறிமுகமாகும்?
இந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்கும் வெளியீட்டு நிகழ்வில் நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனானது, இந்தியா உட்பட உலகளவில் அறிமுகம் செய்யப்படும். நத்திங் போன் 2-வின் அறிமுக நிகழ்வானது நத்திங்கின் அதிகாரப்பூர்வ இணையதளம் (Nothing Official Website) மற்றும் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனல் (Nothing YouTube Channel) வழியாக லைவ் ஸ்ட்ரீம் செய்யப்படும்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட நத்திங் போன் 1-க்கு (Nothing Phone 1) பிறகு வரும் இந்த ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு வரும்? என்கிற கேள்விக்கான சரியான பதில் யாரிடமும் இல்லை. ஆனால் இது எப்படி பார்த்தாலும் ரூ.42,000 அல்லது ரூ. 43,000 க்குள் என்கிற விலைக்கே அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அம்சங்களை பொறுத்தவரை, நத்திங் போன் 2-வின் உறுதிப்படுத்தப்பட்ட அம்சங்களும் உள்ளன. அதே சமயம் எக்கச்சக்கமான லீக்ஸ் தகவல்களும் உள்ளன. உறுதிப்படுத்தப்பட்ட அம்சங்களை பொறுத்தவரை, இது 6.7 இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டிருக்கும். மேலும் இது 4700 எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கும் மற்றும் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் சிப்செட் மூலம் இயக்கப்படும்.
லீக்டு அம்சங்களை (Leaked Features) பொறுத்தவரை, நத்திங் போன் 2 ஆனது 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரையிலான யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜை பெறும். மேலும் இது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ (Android 13 OS) அடிப்படையாக கொண்ட நத்திங்ஓஎஸ் 2.0 (NothingOS 2.0) மூலம் இயக்கப்படும்.
மேலும் இது இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (In-display fingerprint scanner) மற்றும் அலுமினியம் மிட்-ஃபிரேம் (Aluminium mid-frame) ஆகியவற்றையும் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த போன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது (வழக்கம் போல) டூயல் ரியர் கேமரா செட்டப்பையே பேக் செய்யும்.
அதில் 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் யூனிட்டுடன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி சோனி ஐஎம்எக்ஸ்890 சென்சார் இடம்பெறலாம். முன்பக்கத்தை பொறுத்தவரை, செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான 32 மெகாபிக்சல் கேமராவை உட்பொதிக்கப்படலாம் .இது ஒயிட் (White) மற்றும் ட்ராக் க்ரே (Dark Grey) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படலாம்.
வடிவமைப்பை பொறுத்தவரை, இது டிரான்ஸ்பிரென்ட் ஆன பேக் பேனல் (Transparent Back Panel) மற்றும் கர்வ்டு எட்ஜ்களுடன் (Curved Edges) வரும் என்பதை நத்திங் நிறுவனமே அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. மேம்பாடுகளை பொறுத்தவரை, நத்திங் போன் 2-வில் அப்கிரேட் செய்யபட்ட எல்இடி லைட்களுடன் புதுப்பிக்கப்பட்ட கிளைஃப் இன்டர்பேஸ் (Glyph interface) இடம்பெறும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








