Home
Mobile

வாவ் சொல்ல வைக்கும் தரமான அம்சங்களுடன் Nokia எக்ஸ்ஆர்21 போன் அறிமுகம்! என்ன விலை?

எச்எம்டி குளோபல நிறுவனம் தனித்துவமான போன்களை அறிமுகம் செய்து வருகிறது. தற்போது இந்நிறுவனம் நோக்கியா எக்ஸ்ஆர்21(Nokia XR21) ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய போன் நாம் எதிர்பார்க்கும் அனைத்து சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது MIL-STD-810H இராணுவத் தரத்தில் உருவாக்கப்பட்ட இந்த நோக்கியா எக்ஸ்ஆர்21 ஸ்மார்ட்போன் ஆனது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP69K மதிப்பீடுகளைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். அதேபோல் அலுமினியம் சேஸ்,கடினமான பொருட்கள் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.

தரமான அம்சங்களுடன் நோக்கியா எக்ஸ்ஆர்21 போன் அறிமுகம்! என்ன விலை?

குறிப்பாக 6.49-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த நோக்கியா எக்ஸ்ஆர்21 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 550 நிட்ஸ் ப்ரைட்னஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த அட்டகாசமான நோக்கியா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

புதிய நோக்கியா எக்ஸ்ஆர்21 ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் உடன் அட்ரினோ 619எல் ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தரமான அம்சங்களுடன் நோக்கியா எக்ஸ்ஆர்21 போன் அறிமுகம்! என்ன விலை?

64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த நோக்கியா எக்ஸ்ஆர்21 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தெளிவான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த அட்டகாசமான நோக்கியா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

இந்த புதிய நோக்கியா போன் OZO ஆடியோ ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான நோக்கியா எக்ஸ்ஆர்21ஸ்மார்ட்போன் மாடல்.

4800 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டு இந்த நோக்கியா எக்ஸ்ஆர்21 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டு இந்த நோக்கியா எக்ஸ்ஆர்21 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தரமான அம்சங்களுடன் நோக்கியா எக்ஸ்ஆர்21 போன் அறிமுகம்! என்ன விலை?

அதேபோல் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டு இந்த நோக்கியா எக்ஸ்ஆர்21 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த புதிய நோக்கியா போனின் எடை 231 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

மிட்நைட் பிளாக் மற்றும் பைன் கிரீன் நிறங்களில் நோக்கியா எக்ஸ்ஆர்21 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை 625 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.51,190). வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நோக்கியா எக்ஸ்ஆர்21 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். அதன்பின்பு மற்ற நாடுகளில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Nokia XR21 smartphone has been launched: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X