எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்திங்களா.. 5ஜி போனை அறிமுகம் செய்த Nokia: வியக்க வைக்கும் விலை!
எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்தியாவில் புதிய நோக்கியா எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஒரு சில நிறுவனங்கள் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் கொண்ட ஸ்மார்ட்போன்களை ரூ.20,000-க்கு கீழ் அறிமுகம் செய்து வருகிறது.
ஆனால் நம்ம தல நோக்கியா மட்டும் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் கொண்ட இந்த நோக்கியா எக்ஸ்30 5ஜி போனை ரூ.48,999-விலையில் அறிமுகம் செய்து வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்போது இந்த புதிய நோக்கியா எஸ்30 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

நோக்கியா எக்ஸ்30 5ஜி போனின் அம்சங்கள்
நோக்கியா எக்ஸ்30 5ஜி போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 1,080×2,400 பிக்சல்ஸ், 700 நிட்ஸ் ப்ரைட்னஸ், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா க்ளாஸ் விக்டஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா போன். பெரிய டிஸ்பிளே என்பதால் இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்த அருமையாக இருக்கும்.
ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த நோக்கியா எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் இருமையாக இருக்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா போன். குறிப்பாக கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். விரைவில் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா எக்ஸ்30 5ஜி போன். குறிப்பாக மெமரி கார்டை பயன்படுத்த இதில் ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.
நோக்கியா எக்ஸ்30 5ஜி போன் 50எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா எக்ஸ்30 5ஜி மாடல்.

நோக்கியா எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போனில் 4200 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் போன்ற பல சிறப்பான வசதியைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை விரைவில் சார்ஜ் செய்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
விற்பனை எப்போது?
cloud ப்ளூ மற்றும் ஐஸ் ஒயிட் நிறங்களில் இந்த நோக்கியா எக்ஸ்30 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்பு கூறியபடி, இந்த நோக்கியா எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.48,999-விலையில் வாங்க முடியும். இதன் முன்பதிவு இன்று முதல் துவங்குகிறது. வரும் பிப்ரவரி 20-ம் தேதி முதல் இந்த புதிய நோக்கியா போன் விற்பனைக்கு வருகிறது.
சிறப்பு சலுகை
நோக்கியா இணையதளத்தில் இந்த புதிய நோக்கியா 5ஜி போனுக்கு அறிமுக சலுகையாக ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும் என்று கிடைக்கும். இதுதவிர பல்வேறு சிறப்பு சலுகைகள் இந்த நோக்கியா எக்ஸ்30 5ஜி போனுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரேட் ரொம்ப ஜாஸ்தி!
சியோமி, ஒப்போ, மோட்டோ போன்ற நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. ஆனால் நோக்கியா மட்டும் சற்று உயர்வான விலையில் இந்த புதிய 5ஜி போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய நோக்கியா எக்ஸ்30 5ஜி போன் ரூ.25,000-க்கு கீழ் வெளிவந்திருந்தால் அதிக வரவேற்பு கிடைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications