Home
Mobile

இனி தான் அதிரடி ஆரம்பம்: 5ஜி போனை கம்மி விலையில் இறக்கிவிடும் Nokia.! அறிமுகம் எப்போது?

இதுவரை 5ஜி ஸ்மார்ட்போன்களை சற்று உயர்வான விலையில் மட்டுமே அறிமுகம் செய்து வந்த நோக்கியா, தற்போது 5ஜி ஸ்மார்ட்போனை கம்மி விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது எச்டிஎம் குளோபல் நிறுவனம் விரைவில் நோக்கியா ஜி42 5ஜி எனும் ஸ்மார்ட்போனை தான் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

கீக்பெஞ்ச் தளத்தில் நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனின் சில முக்கியமான விவரங்கள் வெளிவந்துள்ளன. அதாவது இந்த நோக்கியா ஜி42 5ஜி போன் ஆனது வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த தளத்தில் வெளியான இந்த போனின் சில முக்கியமான அம்சங்களைப் பார்ப்போம்.

இனி தான் அதிரடி ஆரம்பம்: 5ஜி போனை கம்மி விலையில் இறக்கிவிடும் நோக்கியா

1.9ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் கொண்டு நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக மீடியாடெக் சிப்செட் வசதியை விட ஸ்னாப்டிராகன் சிப்செட் மிகவும் சக்திவாய்ந்தது. எனவே இந்த நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். குறிப்பாக கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது என எச்எம்டி குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

6.5-இன்ச் டிஸ்பிளே, 4ஜிபி/6ஜிபி ரேம்,128ஜிபி ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், 50எம்பி ரியர் கேமரா உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. பின்பு ஊதா மற்றும் சாம்பல் நிறங்களில் நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி தான் அதிரடி ஆரம்பம்: 5ஜி போனை கம்மி விலையில் இறக்கிவிடும் நோக்கியா

அதேபோல் நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போன் சிங்கிள் கோர் டெஸ்டில் 738 மதிப்பெண்களையும், மல்டி கோர் டெஸ்டில் 1718 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தியாவில் நோக்கியா ஜி42 5ஜி போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த நோக்கியா சி32 ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

6.55-இன்ச் எசிடி பிளஸ் வி-நாட்ச் டிஸ்பிளே வசதியை கொண்டு இந்த நோக்கியா சி32 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் இதை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு 1600 × 720 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புத்தம் புதிய நோக்கியா சி32 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

நோக்கியா சி32 ஸ்மார்ட்போனில் 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த நோக்கியா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த நோக்கியா சி32 போன் சிறந்த செயல்திறன் வழங்கும்.

நோக்கியா சி32 ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி ஸடோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. நோக்கியா சி32 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

இனி தான் அதிரடி ஆரம்பம்: 5ஜி போனை கம்மி விலையில் இறக்கிவிடும் நோக்கியா

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த நோக்கியா சி32 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 3 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் என நிறுவனம் கூறுகிறது. பின்பு 10 வாட்ஸ் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா போன்.

தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்புக்கு என ஐபி52 சான்றிதழ் கொண்டு வெளிவந்துள்ளது நோக்கியா சி32 ஸ்மார்ட்போன். மேலும் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்விட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா சி32 ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட நோக்கியா சி32 போனின விலை ரூ.8,999-ஆக உள்ளது. பின்பு இதன் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.9,499-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
new Nokia G42 5G smartphone will be launched in India in July at low price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X