Home
Mobile

பட்ஜெட் விலையில் 50MP கேமராவுடன் அறிமுகமான நோக்கியா ஜி11 பிளஸ்.!

எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா ஜி11 பிளஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா ஜி11 பிளஸ்

நோக்கியா ஜி11 பிளஸ்

இந்த புதிய ஸ்மார்ட்போன் Lake Blue மற்றும் Charcoal Grey நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது நோக்கியா ஜி11 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

விலை மற்றும் விற்பனை

விலை மற்றும் விற்பனை

Nokia G11 Plus ஸ்மார்ட்போனை ரூ.12,499-விலையில் அறிமுகம் செய்துள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம். குறிப்பாக இந்த போனை நோக்கியா.காம் மற்றும் புகழ்பெற்ற இ-காமர்ஸ் இணையதளங்களில் வாங்க முடியும்.

 தரமான டிஸ்பிளே

தரமான டிஸ்பிளே

6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த Nokia G11 Plus ஸ்மார்ட்போன். மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்.

அருமையான கேமரா

அருமையான கேமரா

இந்த புதிய போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர பல கேமரா அம்சங்கள் மற்றும் எல்இடி பிளாஷ் வசதி இவற்றுள் அடக்கம். குறிப்பாக இதன் கேமரா உதவியுடன் தெளிவான படங்களை எடுக்க முடியும்.

சூப்பரான சிப்செட்

சூப்பரான சிப்செட்

நோக்கியா ஜி11 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ-கோர் UniSoC T606 பிராசஸர் வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இதன் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி குளோபல்நிறுவனம்.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

இந்த நோக்கியா ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். குறிப்பாக 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி,கைரேகை ஸ்கேனர், OZO ஆடியோ ஆதரவு உள்ளிட்ட அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த நோக்கியா ஜி11 பிளஸ் மாடல்.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான நோக்கியா ஜி11 பிளஸ் ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் எச்எம்டி குளோபல் நிறுவனம் விரைவில் பல புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
New Nokia G11 Plus Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X