ஹே அமுக்கு டுமுக்கு அமால் டுமால்: கம்மி விலையில் இந்தியாவில் அறிமுகமான Nokia C31.!
எச்எம்டி குளோபல் நிறுவனம் பட்ஜெட் விலையில் அட்டகாசமான நோக்கியா சி31 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக நோக்கியாவின் ட்விட்டர் தளத்தில் இந்த போனின் அறிமுகம் குறித்து வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

நோக்கியா சி31 ஸ்மார்ட்போன்
அதேபோல் இந்த போன் தற்போது அறிமுகம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை தேதி இன்னும் குறிப்பிடவில்லை. இருந்தபோதிலும் புதிய நோக்கியா சி31 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சாதனம் ஏற்கனவே சர்வதேசச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த நோக்கியா சி31 போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

6.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே
நோக்கியா சி31 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 720×1600 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஆக்டோ-கோர் சிப்செட்
ஆக்டோ-கோர் Unisoc SC9863A1 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது நோக்கியா சி31 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

13 எம்பி பிரைமரி கேமரா
நோக்கியா சி31 ஸ்மார்ட்போன் 13 எம்பி பிரைமரி கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் + ஆட்டோஃபோகஸ் லென்ஸ் என்கிற டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா ஸ்மார்ட்போன்.

64ஜிபி ஸ்டோரேஜ் வசதி
நோக்கியா சி31 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
5050 எம்ஏஎச் பேட்டரி வசதி
இந்த நோக்கியா சி31 போனில் 5050 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 3 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸகேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா போன்.

ஆண்ட்ராய்டு 12
நோக்கியா சி31 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் ரூ.11,000-க்கு கீழ் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








