Just In
- 1 hr ago
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- 1 hr ago
ஒரு நாள் மட்டும் காத்திருங்கள் போதும்! ரூ.10,000க்குள் அறிமுகமாகும் பக்கா ஸ்மார்ட்போன்!
- 1 hr ago
பிப்ரவரி 7-வரை எந்த ஸ்மார்ட் டிவியும் வாங்காதீங்க: ஏனெனில் வருகிறது புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி.!
- 1 hr ago
அப்படி போடு! புதுச்சேரி, ஈரோடு, தர்மபுரியில் அறிமுகமான Jio 5G.. வெறும் ரூ.61-க்கு ரீசார்ஜ் செஞ்சா போதும்!
Don't Miss
- News
லகலகலக.. திடீரென மெட்ரோ ரயிலில் ஏறிய 'சந்திரமுகி'.. பயந்து ஓடிப்போன பயணிகள்.. இது ஒரு கலகலகல வீடியோ!
- Lifestyle
பெற்றோர்களே! உங்க குழந்தை அறிவாளியாகவும் சிறந்தவர்களாகவும் வர நீங்க என்ன செய்யணும் தெரியுமா?
- Movies
2023ம் ஆண்டை செல்ஃபியுடன் துவங்கிய நடிகை மீனா.. கலர்புல் புகைப்படங்கள் பகிர்வு!
- Finance
வெயிட்டிங்.. ஏறுமா ஏறாதா.. நைகா நிறுவன முதலீட்டளார்கள் எதிர்பார்ப்பு.. நிபுணர்களின் செம ரிப்போர்ட்!
- Sports
என்னப்பா நடக்குது இங்க.. நியூசி,-ன் அதிவேக பவுலரை அசால்ட் செய்த சுப்மன் கில்.. வாயடைத்துப்போன ரோகித்
- Automobiles
குறைவான விலையில் மைலேஜை வாரி வழங்கும் பைக்! பழைய நண்பன் ஹீரோவின் கதையை முடிக்க ஸ்கெட்ச் போட்ட ஹோண்டா!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
சியோமி, விவோ கொஞ்சம் ஓரம்போங்க: ரூ.10,000-க்கு கீழ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து மாஸ் காட்டிய Nokia.!
எச்எம்டி குளோபல் நிறுவனம் தொடந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புதிய நோக்கியா சி31 எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.
3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட நோக்கியா சி31 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999-ஆக உள்ளது. பின்பு இதன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.10,999-ஆக உள்ளது. மேலும் Charcoal, Mint மற்றும் Cyan நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது நோக்கியா சி31 ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது நோக்கியா சி31 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக 1600 × 720 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
ஆக்டோ-கோர் Unisoc SC9863A1 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது நோக்கியா சி31 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

நோக்கியா சி31 ஸ்மார்ட்போன் 13 எம்பி பிரைமரி கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் + 2எம் மேக்ரோ லென்ஸ் என்கிற டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா ஸ்மார்ட்போன்.
நோக்கியா சி31 ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி வசதிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது Nokia C31 போனில் 5050 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 3 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸகேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் பயனர்களுக்கு பேட்டரி பற்றிய கவலையே இருக்காது.
4ஜி எல்டிஇ, வைஃபை 802.11, புளூடூத் வி4.2, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா சி31 ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போன் தற்போது ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் மட்டுமே வெளிவந்துள்ளது, ஆனால் கூடிய விரைவில் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கம்மி விலையில் ஒரு நல்ல 4ஜி ஸ்மார்ட்போனை வாங்க நினைக்கும் பயனர்கள் இந்த நோக்கியா சி31 ஸ்மார்ட்போனை வாங்குவது நல்லது. அதேபோல் எச்எம்டி குளோபல் நிறுவனம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் பல 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470